விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் வண்டிப்பாளையம், கூனிமேடு, கொழுவாரி, காளியாங்குப்பம், தேவிகுளம் உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு மத்தியில் 15,000 ஏக்கரில் 72 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் சதுப்பு நிலப்பகுதியாக கழுவெளி எனப்படும் பக்கிங்காம் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் மரக்காணத்தில் ஆரம்பித்து சென்னை வழியாக பல நூறு கிலோ மீட்டர் தூரம் பயணித்து ஆந்திராவில் உள்ள காக்கிநாடா பகுதியில் முடிவடைகிறது.
இந்நிலையில், மரக்காணம் பகுதியில் இந்த சதுப்பு நிலப்பகுதியை சுற்றி ஏரி, குளம் உள்ளிட்ட சுமார் 220 நீர் நிலைகள் உள்ளன. இந்த கழுவெளி பகுதியில் ஆண்டு முழுக்க தண்ணீர் இருக்கும். இதனால், இதில் அதிகளவில் மீன்கள், நண்டு, இறால் போன்றவையும் வளர்கின்றன. இந்த கழுவெளி பகுதியில் நிறைந்திருக்கும் தண்ணீரால் கடல் நீரும், கடல் உட்பும் புகாதவாறு பாதுகாக்கப்படுகிறது. இதனால், இப்பகுதியில் விவசாயமும் செழிப்பாக நடைபெற்று வருகிறது.
வெளிநாட்டு பறவைகள் வருகை :
இங்கு இயற்கையாக அமைந்துள்ள கழுவெளி மற்றும் நீர் நிலைகளை தேடி சீனா, இலங்கை, பாகிஸ்தான், ரஷியா போன்ற வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகள் மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள பறைவைகளான கூழக்கடா, அறுவான் மூக்கன், செந்நாரை, பாம்பு கழுத்து நாரை, சாம்பல் நாரை உள்ளிட்ட பல்வேறு இனங்களைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் இங்கு வருகின்றன.
இந்த பறவைகள் இங்கு மூன்று மாதங்களுக்கு மேல் தங்கி முட்டையிட்டு இனப்பெருக்கமும் செய்கின்றன. இவை பருவ நிலை மாறியவுடன் மீண்டும் தங்களது நாடுகளுக்கு சென்று விடும். இங்கு வந்து குவியும் பறவைகளை பாதுகாக்க பறவைகள் சரணாலயம் அமைக்கவேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
தமிழகத்தில் 16வது பறவைகள் சரணாலயம் :
இதன் காரணமாக கடந்த 2 ஆண்டுக்கு முன்னர் மரக்காணத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது விழுப்புரம் மாவட்டத்தின் மரக்காணம் கழுவெளி சதுப்பு நிலம் பகுதியை பறவைகள் சரணாலயமாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
அதன்படி, வலசைப் பறவைகள் வந்து செல்லும் மரக்காணம் கழுவெளி சதுப்பு நிலப்பகுதி தமிழ்நாட்டின் 16-வது பறவைகள் சரணாலயமாக உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் மரக்காணம் பறவைகள் சரணாலயம் தற்போது தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில், பறவைகள் சரணாலயம் பன்னாட்டு பறவைகள் மையமாக ரூபாய் 25 கோடியில் அமைக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில் மரக்காணம் பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். இங்கு, பல்வேறு வகையான பறவைகள் வருகை புரிகின்றன. இந்த, ரம்மியமான காட்சிகள் பார்ப்பதற்கே கண்களுக்கு குளிர்ச்சியாக அமைந்துள்ளது. ஆகையால், பொதுமக்கள் இந்த இயற்கை எழில் சூழ்ந்த பறவைகள் சரணாலயத்திற்கு அதிகளவில் வருகை புரிகிறார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Villupuram