முகப்பு /விழுப்புரம் /

விழுப்புரத்தில் சிறப்பு பூஜைகளுடன் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்! 

விழுப்புரத்தில் சிறப்பு பூஜைகளுடன் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்! 

X
விழுப்புரத்தில்

விழுப்புரத்தில் சிறப்பு பூஜைகளுடன் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்

Villupuram News : விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ் புத்தாண்டை பொதுமக்கள் கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜைகளுடன் சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டத்தில் சித்திரை 1ம் தேதியான இன்று தமிழ் புத்தாண்டை பொதுமக்கள் கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜைகளுடன் சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

தமிழகம் முழுவதும் தமிழ் புத்தாண்டை பொதுமக்கள் கோலாகலமாக வரவேற்று கொண்டாடி வருகின்றனர். கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை திருநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பல்வேறு மாவட்டங்களில் மக்கள் உற்சாகத்துடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக அதிகாலை முதலே பொதுமக்கள், கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர். இயற்கை சார்ந்து கொண்டாடும் சித்திரை திருநாள், தமிழ் வருடத்தின் புதிய தொடக்கமாக கருதி கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள, பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் பொதுமக்கள் வழிபாடு நடத்தினார்கள். அதன்படி, விழுப்புரம் ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜையுடன் பொதுமக்கள் நெய் விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.

First published:

Tags: Local News, Tamil New Year, Villupuram