முகப்பு /விழுப்புரம் /

தமிழ்நாடு அளவிலான பனையேறும் போட்டிகள்.. விழுப்புரம் அருகே கோலாகலம்..

தமிழ்நாடு அளவிலான பனையேறும் போட்டிகள்.. விழுப்புரம் அருகே கோலாகலம்..

X
தமிழ்நாடு

தமிழ்நாடு அளவிலான பனையேறும் போட்டிகள்

Palm climbing competition : விழுப்புரம் அருகே பூரிக்குடிசை பகுதியில் பனங்காடு அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற பனை திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் அருகேயுள்ள பூரிகுடிசை என்ற கிராமத்தில் பனங்காடு அறக்கட்டளை சார்பில் 2 நாட்கள் நடைபெறும் பனை கனவு திருவிழா தொடங்கி நடைபெறுகிறது.  இந்நிகழ்வில் தொடக்கமாக பூரி குடி கிராமம் முழுவதுமாக 100க்கும் மேற்பட்ட பனையேறிகள் ஊர்வலமாக பறை அடித்தும் சிலம்பம் ஆடிவந்து பனைமரத்திற்கு படையலிட்டு திருவிழாவினை தொடங்கினர்.

இந்த பனை திருவிழாவில் பனை பொருட்களால் செய்யப்பட்டும் அழகு சார்ந்த பொருட்கள், இயற்கை விதை பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. இந்நிகழ்வில் கலந்துகொண்ட பனையேறிகள் தமிழகத்தில் கள் இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டுமெனவும், கள் ஒரு போதை பொருள் அல்ல என்பதை அனைவரிடத்திலும் கொண்டு செல்லவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

பனை மரத்தின் பொருட்களால் உணவு மற்றும் அழகுப்பொருட்கள் செய்து பொருளாதாரத்தினை உயர்த்த இந்தியாவிலேயே முதல் முறையாக பூரிகுடிசையில் நடைபெறும் பனை திருவிழா அனைவரிடத்திலும் முன்னுதாரணமாக இருக்கும் என தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு அளவிலான பனையேறும் போட்டிகள்

மேலும் தமிழ்நாடு அளவிலான பனைமரம் ஏறும் போட்டிகள் நடைபெற்றன. இதில் இளைஞர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து கொண்டனர். இதில், முதல் இடத்தை பிடிப்பவர்களுக்கு பத்தாயிரம் ரூபாயும் இரண்டாம் இடத்தைப் பிடித்தவர்களுக்கு 5000 ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொதுமக்கள் அனைவரும் பனையேறுபவர்களை கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Villupuram