ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரத்தில் ஒரு தாஜ்மஹால்..!! 

விழுப்புரத்தில் ஒரு தாஜ்மஹால்..!! 

விழுப்புரம்

விழுப்புரம் - தாஜ்மஹால் கண்காட்சி

Tajmahal at Villupuram | நம்ம விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் தாஜ்மஹால் கண்காட்சி நடக்குது. இந்த கண்காட்சி அரங்கம் நடைபெறும் மைதானத்துல தான் தாஜ்மஹாலை நம்ம கண்முன்னே எழுப்பியிருக்காங்க.. இதை நேர்ல வந்து பார்த்தீங்கனா தாஜ்மஹால நேரடியா பார்க்குற உணர்வு உங்களுக்கு ஏற்படும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

என்னங்க சொல்றீங்க.. விழுப்புரத்தில் தாஜ்மஹாலா? அட ஆமாங்க தாஜ்மஹால் பார்க்கனும்னா ஆக்ரா வரைக்கும் போகத்தேவையில்ல.. நம்ம விழுப்புரத்துலயே அச்சு அசலா தாஜ்மஹால் கட்டியிருக்காங்க.. ஒன்னும் புரியலயா.. வாங்க என்னனு முழுசா தெரிஞ்சுக்கலாம்..

ஷாஜஹான் தனது காதல் மனைவி மும்தாஜுக்காக யமுனை நதிக்கரையில் 16ம் நூற்றாண்டிய கட்டிய பளிங்கு மாளிகை தான் இன்றைய உலக அதிசயங்களுள் ஒன்றாக திகழும் தாஜ்மஹால். வாழ்வில் ஒருமுறையாவது இந்த உலக அதிசயத்தை பார்க்க வேண்டும் என்பது நம்மில் பலரின் கனவும் ஏக்கமாகவும் இருக்கும்.

இந்த ஏக்கத்தை போக்குவதற்காக விழுப்புரத்தில் தாஜ்மஹாலை உருவாக்கியிருக்காங்க..

அது வேற ஒன்னும் இல்ல நம்ம விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் தாஜ்மஹால் கண்காட்சி நடக்குது. இந்த கண்காட்சி அரங்கம் நடைபெறும் மைதானத்துல தான் தாஜ்மஹாலை நம்ம கண்முன்னே எழுப்பியிருக்காங்க.. இதை நேர்ல வந்து பார்த்தீங்கனா தாஜ்மஹால நேரடியா பார்க்குற உணர்வு உங்களுக்கு ஏற்படும்.

மேலும் படிக்க:  அஜித் நடித்த இந்த பாடல் காட்சி இங்குதான் எடுக்கப்பட்டதா!... விழுப்புரம் ஷூட்டிங் ஸ்பாட்

கடந்த அக்டோபர் 1ம்தேதி தொடங்குன இந்த கண்காட்சியை காண்பதற்கு விழுப்புரம் சுற்றியுள்ள பல பகுதிகளிலிருந்து பொது மக்கள் வருகை தருகின்றனர்.

இந்தக் கண்காட்சியில் பொதுமக்களை கவரும் பல்வேறு அம்சங்களும் இடம்பெற்றிருக்கு. குழந்தைகள் விளையாடுவதற்கான பல்வேறு விளையாட்டுக்கள், பல்வேறு உணவு வகைகளை ருசிக்க உணவு அரங்குகள், வீட்டுக்கு தேவையான பொருட்கள், அழகு பொருட்கள் என பல விஷயங்கள் இக்கண்காட்சியில் உள்ளது.

மேலும் படிக்க:  விழுப்புரத்தில் தொழில் தொடங்க தாட்கோ திட்டத்தில் நிதி உதவி - தகுதி, விண்ணப்பிக்கும் வழிமுறை

Water Games,ராட்டினம், ஊஞ்சல், ட்ரெயின் என பல்வேறு அம்சங்கள் உள்ளதால் இங்கு வரும் குழந்தைகள் மணிக்கணக்கில் செம்ம ஹேப்பியா எஞ்சாய் பன்றாங்க..இந்த கண்காட்சிக்கு நுழைவு கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பொழுதுபோக்கு, விளையாட்டு விஷயங்களுக்கு தனி கட்டணம் வசூலிக்கிறாங்க.. இங்கு வரும் பொதுமக்கள் குறிப்பாக இளம் ஜோடிகள் தாஜ்மஹால் முன் நின்று செல்பி புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.இந்த மாதம் 30ம் தேதி வரை கடைசி வரை இந்த தாஜ்மஹால் கண்காட்சி நடைபெற உள்ளது.

Published by:Arun
First published:

Tags: Local News, Tajmahal, Villupuram