முகப்பு /செய்தி /விழுப்புரம் / விஷம் குடித்த கணவன் மருத்துவமனையில் அனுமதி... நலம் விசாரிக்கச் சென்ற மனைவிக்கு நேர்ந்த கொடூரம்..!

விஷம் குடித்த கணவன் மருத்துவமனையில் அனுமதி... நலம் விசாரிக்கச் சென்ற மனைவிக்கு நேர்ந்த கொடூரம்..!

குற்றம்

குற்றம்

சம்பவம் தொடர்பாக  விக்கிரவாண்டி காவல் துறையினர் சரத்குமாரை கைது செய்து சிகிச்சைக்காக மருத்துவமனையிலேயே மீண்டும் சேர்த்துள்ளனர்.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரியில் தற்கொலைக்கு முயன்று சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த சரத்குமார் என்பவர், தனது  மனைவியின் கழுத்தை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகிலுள்ள ஈச்சங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார். இவருடைய மனைவி பரணி. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. பரணி முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் கணிணி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் மனைவி பரணி மீது சந்தேகம் கொண்ட சரத்குமார் குடித்துவிட்டு வந்து அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவும் கண்வன், மனைவிக்கு இடையே மீண்டும் சண்டை வந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை பரணி வழக்கம்போல பணிக்கு வந்துவிட்ட நிலையில். வீட்டில் இருந்த சரத்குமார் பிளிச்சிங் பவுடர் மற்று பினாயில் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  அருகில் இருந்தவர்கள் சரத்குமாரை மீட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கிச்சைக்காக தேர்த்துள்ளனர்.

அப்போது அங்கு பணி செய்பவர்களிடம் மனைவியை  பார்க்க வேண்டும் என சரத்குமார் கூறியுள்ளார். முதலில் மறுத்த பரணி பிறகு சென்று சரத்குமாரை பார்த்துள்ளார். இருவரும் பேசிக்கொண்டிருந்த போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பரணி கழுத்தில் வெட்டியுள்ளார்.

இதையும் வாசிக்கஆருத்ரா மோசடி வழக்கு... நடிகர் ஆர்.கே.சுரேஷின் வங்கிக் கணக்கு முடக்கம்...!

இதில் கழுத்தில் காயமடைந்த பரணியை உடனடியாக அருகில் இருந்தவர்கள் காப்பாற்றினர். தீவிர சிகிச்சை பிரிவில் பரணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக  விக்கிரவாண்டி காவல்துறையினர் சரத்குமாரை கைது செய்து சிகிச்சைக்காக மருத்துவமனையிலேயே மீண்டும் சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் மனைவியின் கழுத்தை கணவரே வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

top videos

    விழுப்புரம் செய்தியாளர்: ஆ.குணாநிதி

    First published:

    Tags: Crime News