ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரம் அருகே நெடுஞ்சாலையில் விழுந்த திடீர் பள்ளம்.. அச்சத்தில் வாகன ஓட்டிகள்.. 

விழுப்புரம் அருகே நெடுஞ்சாலையில் விழுந்த திடீர் பள்ளம்.. அச்சத்தில் வாகன ஓட்டிகள்.. 

விழுப்புரம்

விழுப்புரம் - மலட்டாறு பாலத்தில் விழுந்த திடீர் பள்ளம்..

Vikravandi - Thanjavur Road | விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் வரையிலான நெடுஞ்சாலை  மலட்டாற்று பாலத்தினூடே  செல்கிறது.  இந்த நெடுஞ்சாலை  குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.  ஆங்காங்கே திடீர் பள்ளங்களும் ஏற்படுகின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, மண் அரிப்பு ஏற்பட்டு மலட்டாற்று பாலத்தில் திடீரென பள்ளம் தோன்றியுள்ளது. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து உள்ளனர்.

தொடர் மழையினால் தென்பெண்ணையாறு மற்றும் அதன் கிளை ஆறுகளான மலட்டாறு, பம்பை ஆறு, நரியாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. விழுப்புரம் அருகே ஏ.கே.குச்சிப்பாளையம் பகுதியை கடந்து செல்லக்கூடிய மலட்டாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளப்பெருக்கினால் ஆற்றுப்பாலத்தின் மேல்பகுதியில் சாலையோரமாக நேற்று மண் அரிப்பு ஏற்பட்டு திடீரென பள்ளம் உருவாகியுள்ளது.

விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் வரையிலானநெடுஞ்சாலை மலட்டாற்று பாலத்தினூடே செல்கிறது. இந்த நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. ஆங்காங்கே திடீர் பள்ளங்களும் ஏற்படுகின்றன. இதில் பயணிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

மேலும் படிக்க:  இந்த தெருவுக்குள்ள நுழைஞ்சாலே மிரண்டு போவீங்க..! மதுரை 10 தூண் சந்து சிறப்புகள்..!

மேலும் திடீரென ஏற்பட்ட பள்ளத்தினால் அவ்வழியே வரும் பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் அச்சத்தில் உள்ளனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தற்காலிகமாக மண்ணைக் கொட்டி இந்த பள்ளத்தை நிரப்ப வேண்டும் எனவும் இல்லை என்றால் எச்சரிக்கை பலகையாவது வைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மலட்டாறு பாலத்தில் விழுந்த திடீர் பள்ளம்

நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விபத்து தடுப்பு நடவடிக்கை பணிகளை மேற்கொள்ளாததால் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைத்து இடங்களையும் முறையாக ஆய்வு செய்து விபத்துகளை தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram, Vilu