ஹோம் /விழுப்புரம் /

Villupuram News : தேசிய நெடுஞ்சாலையில் தோன்றிய திடீர் பள்ளம் - சரி செய்யும் பணியில் விழுப்புரம் நகராட்சி நிர்வாகம்

Villupuram News : தேசிய நெடுஞ்சாலையில் தோன்றிய திடீர் பள்ளம் - சரி செய்யும் பணியில் விழுப்புரம் நகராட்சி நிர்வாகம்

X
விழுப்புரம்

விழுப்புரம்

Villupuram News : விழுப்புரம் – புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை தெற்கு பக்கம், ரெட்டியார் மில் பேருந்து நிறுத்தம் அருகே பாதாள சாக்கடை அமைக்கப்பட்டிருந்த இடத்தில் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

பாதாள சாக்கடை பைப் லைன் உடைந்ததால் விழுப்புரம் – புதுச்சேரி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் திடீரென மெகா சைஸ் பள்ளம் உருவானது. இதனால் வாகன போக்குவரத்து மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டது. சாலையில் திடீர் என்று ஏற்பட்ட பள்ளத்தினை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

விழுப்புரம் நகராட்சியில் கீழ் உள்ள 42 வார்டுகள் முழுவதும் பாதாள சாக்கடை அமைக்கும் பணி ரூ. 36 கோடி மதிப்பில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது. நிதி பற்றாக்குறை, நகராட்சி வார்டுகள் விரிவாக்கம் காரணமாக பாதாள சாக்கடை பணி கிடப்பில் போடப்பட்டது.திட்ட மதிப்பீடு தொகை ரூ. 50 கோடியாக உயர்த்தி கடந்த சில வருடத்திற்கு முன்பு மீண்டும் பணிகள் துவங்கியது. ஆனால், 42 வார்டுகளிலும் பாதாள சாக்கடை பணி முழுமை பெறவில்லை.

பல வார்டுகளில் இன்னும் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. ஏற்கனவே அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை மேன்ஹோல்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் வழிந்தோடி வருகிறது.இந்நிலையில், விழுப்புரம் – புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை தெற்கு பக்கம், ரெட்டியார் மில் பேருந்து நிறுத்தம் அருகே பாதாள சாக்கடை அமைக்கப்பட்டிருந்த இடத்தில் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது.

மேலும் படிக்க :  ரூ.25,000 சம்பளம்... புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை... எக்ஸாம் இல்லை - உடனே விண்ணப்பியுங்கள்

துவக்கத்தில் 2 அடியாக இருந்த பள்ளம், நேரம் ஆக ஆக பல அடி அகலத்திற்கு மாறி மெகா சைஸ் பள்ளமாக மாறியது. இது குறித்து அறிந்த விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, போலீஸ் மூலம் சாலையில் வாகனங்கள் செல்லாதபடி தடுப்புகளை அமைத்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பின்பு, பாதாள சாக்கடை பள்ளத்தை சரிசெய்ய ஜே.சி.பி. இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, பள்ளத்தை தோண்டி குழாய்களில் உள்ள கசிவுகளை அடைத்து, பள்ளத்தை மூடும் பணி நடந்து வருகிறது. நெடுஞ்சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால், வாகனங்கள் மாற்றுவழியில் திருப்பிவிடப்பட்டுள்ளது. இந்த சாலையில் ஏற்பட்ட பள்ளம் விழுப்புரம் நகர மக்களிடையே ஒரு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

First published:

Tags: Local News, Villupuram