முகப்பு /விழுப்புரம் /

வெடித்து சிதறிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரிகள்.. விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் பரபரப்பு..

வெடித்து சிதறிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரிகள்.. விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் பரபரப்பு..

X
வெடித்து

வெடித்து சிதறிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரிகள்

Villuppuram Fire Accident : விழுப்புரத்தில் செயல்பட்டு வரும் பேட்டரி ஸ்கூட்டர் விற்பனை நிலையத்தில் திடீரென பேட்டரி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஸ்கூட்டர் நிறுவனத்தில் பணியாளர்கள் பணி செய்து கொண்டிருக்கும் போதே ஸ்கூட்டருக்கு மாற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த புதிய பேட்டரிகள் 2 திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அந்த இடமே புகை மண்டலமாக மாறியது.

இதனையடுத்து அலறியடித்துகொண்டு வெளியே வந்த பணியாளர்கள் அருகிலுள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த விழுப்புரம் தீயணைப்புதுறையினர் தண்ணீரை அடித்து தீயை அனைத்தனர். தீயை அணைத்த பிறகும் பேட்டரிகளில் இருந்து வெளியே வந்த புகை ஸ்கூட்டர் விற்பனை நிலையம் முழுவதும் பரவி புகை மண்டலமாக காட்சியளித்தது.

வெடித்து சிதறிய பேட்டரிகள்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த தீ விபத்தில் தீயானது பரவுவதை தீயணைப்பு வீரர்கள் உடனடியாக கட்டுப்படுத்தியதால் பல லட்சம் மதிப்பிலான புதிய ரக பேட்டரி ஸ்கூட்டர்கள் தீ விபத்திலிருந்து மீட்கப்பட்டன. இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தீயணைப்பு துறையின் இந்த துரித செயலை பொதுமக்கள் வெகுவாக பாரட்டினர்.

top videos
    First published:

    Tags: Local News, Villupuram