முகப்பு /விழுப்புரம் /

வில்லுப்பாட்டு, நாட்டுப்புற பாடல், பறை இசைப்பது என கலை நிகழ்ச்சிகளில் கலக்கிய விழுப்புரம் பள்ளி மாணவர்கள்

வில்லுப்பாட்டு, நாட்டுப்புற பாடல், பறை இசைப்பது என கலை நிகழ்ச்சிகளில் கலக்கிய விழுப்புரம் பள்ளி மாணவர்கள்

X
கலை

கலை நிகழ்ச்சிகளில் கலக்கிய மாணவர்கள்

Villuppuram News : விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக மைதானத்தில்செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் ‘ஓயா உழைப்பின் ஓராண்டு” சாதனைகள் வெளிப்படுத்தும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் ‘ஓயா உழைப்பின் ஓராண்டு" சாதனைகள் வெளிப்படுத்தும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மைதானத்தில் நடைபெற்று வரும் கண்காட்சியில் பல்வேறு குழுக்களின் கீழ் செயல்பட்டு வரும் திட்டங்களை பற்றிய அரங்குகள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருப்பதால் இந்த கண்காட்சி வரும் 14ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காகவும், மாணவர்களின் திறமையை பெற்றோர்கள் அறியும் வகையிலும் பெருந்திட்ட வளாக மைதானத்தில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழுப்புரம் சுற்றியுள்ள பல அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் நாட்டுப்புற பாடல்களுக்கு நடனம் ஆடுவது, பறை இசைப்பது, தமிழக அரசாங்கம் மக்களுக்கு வழங்கும் திட்டம் குறித்து வில்லுப்பாட்டு பாடுவது போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். அரசு பள்ளி மாணவர்கள். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

First published:

Tags: Local News, Villupuram