முகப்பு /விழுப்புரம் /

விழுப்புரத்தில் வேலை வாய்ப்பு முகாம்.. மாணவ, மாணவிகள் பங்கேற்பு!

விழுப்புரத்தில் வேலை வாய்ப்பு முகாம்.. மாணவ, மாணவிகள் பங்கேற்பு!

X
விழுப்புரம்

விழுப்புரம் வேலை வாய்ப்பு முகாம்

Viluppuram job fair | விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 2500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram | Gingee

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 2500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தனியார் பள்ளியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து தனியார் தொழில் நிறுவனங்கள் பங்கேற்ற வேலைவாய்ப்பு முகாம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் உள்ள 193 முன்னனி நிறுவனங்கள் மற்றும் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்கள் என சுமார் 60 ஆயிரம் பணியிடங்களுக்கு நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் செஞ்சி பகுதியில் இருந்து மட்டும் இல்லாமல் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் இருந்து கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் இளைஞர்கள் என சுமார் 2500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இதில் 275 பேர் வேலை வாய்ப்பை பெற்று பயனடைந்தனர்.

வேலைவாய்ப்பு முகாம் காலை தொடங்கி மாலை வரையில் நடைபெற்றது. இந்த மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்த வேலை வாய்ப்பு முகாமில் பல பேர் பயனடைந்து வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பழனி வாழ்த்து கூறினார்.

First published:

Tags: Job Fair, Local News, Villupuram