ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரம் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு.. அரசு போட்டி தேர்விற்கான இலவச பயிற்சி - கலந்துக்கொண்டு பயன்பெறுங்கள்

விழுப்புரம் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு.. அரசு போட்டி தேர்விற்கான இலவச பயிற்சி - கலந்துக்கொண்டு பயன்பெறுங்கள்

SSC-CHSL - Free Practice Start for Exam

SSC-CHSL - Free Practice Start for Exam

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு  போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இப்போட்டித் தேர்வில் கலந்து கொண்டு பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர். மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால், தற்பொழுது 4,500க்கும் மேற்பட்ட பல்வேறு விதமான பணிக்காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இப்பணிக்காலியிடங்களுக்கான கல்வித் தகுதி 12-ம் வகுப்பு ஆகும். இவற்றிற்கு https://ssc.nic.in/ என்ற இணையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 04.01.2023 ஆகும்.

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக 14.12.2022 அன்று காலை 10.30 மணி முதல் இப்போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் தேர்ந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது.

இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடைய விரும்பும் இப்போட்டித் தேர்விற்கு விண்ணப்பித்த நபர்கள் 13.12.2022 –க்குள் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி பதிவு செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இப்பயிற்சி வகுப்புகள் குறித்து கூடுதல் விவரம் தெரிந்துக்கொள்ள 9499055906 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த 12-ம் வகுப்பு படித்த இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Jobs, Local News, Villupuram