ஹோம் /விழுப்புரம் /

இலவச பயிற்சி அளிக்கும் ஸ்போர்ட்ஸ் அகாடமி..  அசத்தும் விழுப்புரம் இளைஞர்கள்

இலவச பயிற்சி அளிக்கும் ஸ்போர்ட்ஸ் அகாடமி..  அசத்தும் விழுப்புரம் இளைஞர்கள்

விழுப்புரம்

விழுப்புரம்

Free Sports Coaching at Villupuram | விழுப்புரத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஸ்போர்ட்ஸ் அகாடமி தொடங்கி நூறுக்கும் அதிகமான மாணவர்களுக்கு இலவச விளையாட்டு பயிற்சி அளித்து, மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் சாதிக்க காரணமாக திகழ்கின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

விழுப்புரத்தில் கடந்த ஓராண்டாக ஹாப்பி, சிவசக்தி மால்கம் ஸ்போர்ட்ஸ் அகாடமிகள் செயல்பட்டு வருகிறது. இங்கு மல்லர் கம்பம், ஜிம்னாஸ்டிக், சிலம்பம், யோகா போன்ற கலைகளை இலவசமாகவே கற்றுத் தருகின்றனர் சில இளைஞர்கள்.

சிவசக்தி, பிரவீன், சுரேந்தர், செல்வம், மொழியன் ஆகிய இந்த 5 இளைஞர்களுமே 25 வயதிற்குட்பட்டவர்கள் தான். விளையாட்டு மற்றும் பாரம்பரிய கலைகள் மீதான ஆர்வம் கொண்ட இந்த இளைஞர்கள் தங்களின் சுய முயற்சியின் மூலம் விளையாட்டு உபகரணங்களை வாங்கி அதன் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி தருகின்றனர்.

மேலும் படிக்க:  மானியத்துடன் காளான் வளர்ப்பு.. வீட்டிலிருந்தே மாதம் ரூ.50,000 வருமானம்.. விழுப்புரம் நபரின் அசத்தல் பிசினஸ்..

இந்த அகடமிக்கு என சொந்தமாக மைதானம் இல்லாத நிலையில் பொது இடங்களில் தான் மாணவர்களுக்கு பயிற்சி தருகின்றனர். ஏற்கனவே தனியாரின் இடத்தில் பயிற்சி அளித்து வந்த இவர்கள் அங்கு அனுமதி மறுக்கப்படவே தற்போது விழுப்புரம் சிந்தாமணி அரசுப் பள்ளியில் அனுமதி பெற்று அந்த மைதானத்தில் பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த அகாடமியில் 3 வயது முதல் 20 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் தினந்தோறும் பயிற்சி பெறுகிறார்கள். காலை 6 மணி முதல் 7.30 மணி வரை பயிற்சி நடக்கிறது.

தீவிர பயிற்சி பெறும் மாணவர்கள்

இந்த அகாடமியின் பயிற்சியாளர்கள் சமீபத்தில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற மாநில அளவிலான மல்லர் கம்பம் போட்டியில் பங்கேற்று பரிசு பெற்றிருக்கின்றனர்.

இதையும் படிங்க:  அஜித் நடித்த இந்த பாடல் காட்சி இங்குதான் எடுக்கப்பட்டதா!... விழுப்புரம் ஷூட்டிங் ஸ்பாட்

இந்த போட்டியில் 37 குழுக்கள் பங்கேற்றனர். அதில் ஹாப்பி மால்கம் அகாடமி மற்றும் சிவசக்தி மால்கம் ஸ்போர்ட்ஸ் அகாடமியை சேர்ந்த பெண்கள் குழு கயிறு மால்கம் போட்டியில் இரண்டாம் இடத்தையும், ஆண்கள் குழு இரண்டாம் இடத்தையும், தனிநபர் மல்லர் கம்பம் போட்டியில் முதல் இடத்தையும், மூன்றாவது இடத்தையுயும் பெற்றுள்ளனர். இந்த மாணவர்களுக்கு ரூ.50,000 பரிசு தொகை கிடைத்துள்ளது.

பதக்கங்களை குவித்த மாணவர்கள்

மற்ற விளையாட்டுக்களுக்கு கிடைக்கும் வரவேற்பு போல நம் பாரம்பரிய விளையாட்டுக்களுக்கும் கலைகளுக்கும் வரவேற்பு கிடைப்பதில்லை. எனவே தான் பாரம்பரிய கலைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும், அதற்கு பணம் தடையாக இருக்கக் கூடாது என்ற உன்னத நோக்கில் தான் இங்கு வரும் மாணவர்களிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை என்கின்றனர் பயிற்சி அளித்து வரும் இளைஞர்கள்.

இதையும் படிங்க:  விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு குட்நியூஸ் : ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

போதுமான வசதிகள் இல்லாத நிலையிலும் கூட இந்த அகாடமியில் பயிற்சி பெறும் மாணவர்கள் வெளி மாவட்டத்துக்கு சென்று போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுகிறார்கள். எங்கள் அகாடமிக்கு மல்லர் கம்பம் பயிற்சி தருவதற்கான மேட் (மெத்தை), பிற விளையாட்டு உபகரணங்கள் போன்றவற்றை அரசு தரப்போ, தன்னார்வலர்களோ உதவி செய்தால் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மேலும் பல மாணவர்களை பாரம்பரிய விளையாட்டுக்களில் தங்களால் ஜொலிக்க வைக்க முடியும் என்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இலவச பயிற்சி பெற விரும்புபவர்களும், இவர்களுக்கு உதவ நினைப்போரும் இந்த அகடமியினரை ‘ ” என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்..

Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram