முகப்பு /விழுப்புரம் /

விழுப்புரம் சிவ விஷ்ணு ஆலயத்தில் நந்திக்கு சிறப்பு பிரதோஷ வழிபாடு!

விழுப்புரம் சிவ விஷ்ணு ஆலயத்தில் நந்திக்கு சிறப்பு பிரதோஷ வழிபாடு!

X
நந்திக்கு

நந்திக்கு சிறப்பு பிரதோஷ வழிபாடு

விழுப்புரம் குழந்தைவேல் நகரில் உள்ள சிவ விஷ்ணு ஆலயத்தில் பிரதோஷ சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் மிக விமரிசையாக நடைபெற்றன.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் குழந்தைவேல் நகரில் உள்ள சிவ விஷ்ணு ஆலயத்தில் பிரதோஷ சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் மிக விமர்சையாக நடைபெற்றன. அதன்படி, மாலை 5 மணி முதல் மூலவருக்கும், நந்தி பெருமானுக்கும் பிரதோ‌ஷ கால பூஜை நடைபெற்றது.

இந்நிலையில், பால், தயிர், பன்னீர், பழம், தேன், சந்தனம், விபூதி போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் சந்தனம் பூ போன்றவற்றை கொண்டு நந்திக்கு சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

நந்திக்கு சிறப்பு பிரதோஷ வழிபாடு

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல் விழுப்புரம் திரு.வி.க. வீதியில் உள்ள கைலாசநாதர் கோயில், பனையபுரம் பனங்காட்டீஸ்வரன் கோயில், கீழ்ப்பெரும்பாக்கம் பசுபதீஸ்வரர் கோயில் உள்ளிட்ட விழுப்புரம் பகுதியில் உள்ள சிவன் கோயில்களிலும் பிரதோ‌ஷ பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றன.

First published:

Tags: Local News, Villupuram