ஹோம் /விழுப்புரம் /

1,000 யாகங்களுக்கு சமம்... பூவரசங்குப்பம் நரசிம்மர் கோவில் நவராத்திரி யாகத்தின் சிறப்புகள்..

1,000 யாகங்களுக்கு சமம்... பூவரசங்குப்பம் நரசிம்மர் கோவில் நவராத்திரி யாகத்தின் சிறப்புகள்..

பூவரசங்குப்பம்

பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவில்

Villupuram District News | விழுப்புரம் அடுத்த பூவரசங்குப்பத்தில் தென் அகோபிலம் என அழைக்கப்படும் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நவராத்திரி சிறப்பு யாகம் நடைபெற்றது.. இது 1000 யாகங்களுக்கு சமமானதாக கூறப்படுகிறது..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

விழுப்புரம் அடுத்த பூவரசங்குப்பத்தில் தென் அகோபிலம் என அழைக்கப்படும் லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இக்கோயிலில் நவராத்திரி விழா கடந்த 25ம் தேதி துவங்கியது. அன்று முதல் தினமும் காலை மூலவர் லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. தொடர்ந்து, தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் ஸ்ரீசுத்த ஹோமம், தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமங்கள் நடந்தது.

தலைமை பட்டாச்சாரியர் பார்த்தசாரதி தலைமையில், 25க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியர்கள் ஹோமத்தில் பங்கேற்றனர். ஹோமத்தில் பழங்கள், மூலிகைகள், ஒரு டன் நெய், பட்டு புடவை சேர்க்கப்பட்டு வந்தது.

நிறைவு நாளான விஜயதசமியன்று மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கு திருமஞ்சனம் நடந்தது. மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும் படிக்க: பொன்னியின் செல்வன் போற்றும் பழையாறை - சிறப்புகள் என்னென்ன தெரியுமா?

காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை ஸ்ரீசுத்த ஜெபம் நடந்தது. பகல் 12:00 மணிக்கு ஹோமம் ஆரம்பமாகி, 12:30 மணிக்கு பூர்ணாஷூதி நடந்தது. மாலை 6:00 மணி முதல் ஜெபம் மற்றும் 18 வகையான இனிப்பு, 18 வகையான பழங்கள், 108 கிலோ லட்டு, 18 பட்டு புடவைகளால் ஹோமம் நடந்தது. பின், கலசம் புறப்பாடாகி மூலவர் மற்றும் உற்சவருக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.

ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

இந்த யாகத்தைப்பற்றி கோயில் அர்ச்சகர் கூறியதாவது :

இக்கோவில் 5000 ஆண்டுகள் பழமையான கோயில். இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு வருடந்தோரும் நவராத்திரி விழாவில் யாகம் நடத்தப்படும்.

மேலும் படிக்க:  சொந்த வீடு வாங்கவும், சொத்து பிரச்சினை நீங்கவும் திருச்சியில் வழிபட வேண்டிய கோவில்!

இந்த யாகத்தில் தனிச்சிறப்பாக பல்வேறு வகையான பழங்கள், உலர் பழங்கள், பட்டுப் புடவை, 108 வகையான மூலிகை பொருட்கள் கொண்டு யாகம் நடத்தப்படுகிறது. இந்த யாகத்தினை காண வரும் பக்தர்களின் குறைகள் நீங்கும், குழந்தைகளின் கல்வியின் வளர்ச்சி சிறப்படையும் என்பது ஐதீகம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த யாகத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா ஆந்திரா, உத்தரபிரதேசம் மகாராஷ்டிரா, தெலுங்கானா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram