விழுப்புரத்தில் முத்தாம்பிகை அம்மன் கோயிலில் 108 பசுகளுக்கு சிறப்பு கோ பூஜை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் திருவாமத்தூர் கிராமத்தில் 1200 ஆண்டு பழமையான முத்தாம்பிகை மற்றும் அபிராமேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் உள்ள புதிய பஞ்சவர்ண ராஜகோபுரம், விமானம் மற்றும் பரிவாரங்கள் விநாயகர் முருகன் சுவாமி அம்பாள் ஆகிய அனைத்து மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 108 பசுக்களுக்கு கோ பூஜை மிக விமர்சையாக நடைபெற்றது .
விழுப்புரம் அடுத்த ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருவாமத்தூர் என்ற கிராமம். இயற்கை எழில் சூழ்ந்த இந்த கிராமத்தில் சிறப்பு வாய்ந்த மற்றும் பழமை வாய்ந்த சிவன், அம்பாள் என்று தனி கோயில் உள்ளது. இதுவே இந்த கோயிலின் சிறப்பம்சமாகும். தேவாரத்தில் பாடப்பெற்ற ஸ்தலம் என்ற சிறப்பையும் இந்த கோயில் பெறுகிறது.
முன் ஒரு காலத்தில் வன்னி மரக் காடாக இருந்த இவ்விடத்தில் சுவாமி சுயம்பு மூர்த்தி, பசுக்கள் மற்ற மிருகங்களால் அடிக்கடி தாக்கப்பட்டு வருவதால் அவற்றிடமிருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்காக அவை ஒன்றுகூடி இறைவனை நோக்கி தவம் இருந்து கொம்பு பெற்ற தலமாக இக்கோயில் உள்ளது. பசுக்களுக்கு தாயூராகவும் வடமொழியில் கோமத்ருபுரம் என்றும்
திரு -ஆ -மாத்தூர் என்பது திருஆமாத்தூர் என வழங்கப்பட்டு தற்போது திருவாமத்தூர் என அழைக்கப்பட்டு வருகிறது.இறைவன் அபிராமேஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்பு திருமேனி ஆக உள்ளார்.
பசுக்கள் வழிபட்டதன் தன் அடையாளமாக இறைவன் திருவடி மீது கால் குளம்பு பதித்த வடுவும் திருமேனியில் பால் சொரிந்த வடுவும் உள்ளது. ஸ்ரீராமர் இலங்கை செல்லும் போது இத்தலத்திற்கு வந்து அபிமானமாக வழிபட்டதால் இறைவனுக்கு அபி -ராம-ஈஸ்வரர் = அபிராமேஸ்வரர் என பெயர் வழங்கப்பட்டது. இதனை திருநாவுக்கரசர் தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இத்தனை பழமையான கோவிலுக்கு வருகிற தை மாதம் 18ம் தேதி அதாவது ஆங்கில நாள்காட்டி படி பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் ஏழு நிலை ராஜகோபுரத்திற்கு அம்மாள் ராஜகோபுரம் பரிவார விமானக் கலசங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக பணிகள் அனைத்தும் மும்முரமாக கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
இதனை முன்னிட்டு 108 பசுக்களுக்கு கோ பூஜை மிக விமர்சையாக நடைபெற்றது. இதில் திருவாமத்தூர் சேர்ந்த பொதுமக்கள் தங்களுடைய பசுக்களை அழைத்து வந்தனர். பசுக்களை குளிப்பாட்டி மஞ்சள் குங்குமம் பூசி மாலை அணிவித்து, அரிசி வெல்லம் சேர்ந்து படையல் இட்டு, தீபாரதனை காட்டி மலர்கள் தூவி சிறப்பு கோ பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இதில் விழுப்புரம் சுற்றியுள்ள பல பகுதிகளிலிருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு, பசுக்களின் ஆசி பெற்று சென்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Villupuram