முகப்பு /விழுப்புரம் /

விழுப்புரத்தில் மின் இணைப்பு பெற விண்ணப்பித்தவர்களுக்கு சிறப்பு முகாம்

விழுப்புரத்தில் மின் இணைப்பு பெற விண்ணப்பித்தவர்களுக்கு சிறப்பு முகாம்

மின் வாரியம்

மின் வாரியம்

Viluppuram | விழுப்புரத்தில் மின் இணைப்பு பெற விண்ணப்பித்தவர்களுக்கு நாளை சிறப்பு முகாம் நடக்கிறது. மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரத்தில் மின் இணைப்பு பெற விண்ணப்பித்தவர்களுக்கு நாளை சிறப்பு முகாம் நடக்கிறது. இதில், பெயர், சர்வே எண், சர்வே எண் மாற்றம் செய்து கொள்ளலாம் என்று விழுப்புரம் கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக விழுப்புரம் கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தமிழகம் முழுவதும் விவசாய மின் இணைப்புகள் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, மின்பகிர்மான கழகம் சார்பில் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், விவசாய மின் இணைப்பு கேட்டு சாதாரண முன்னுரிமைப் பிரிவில் கடந்த 2003 ஏப்ரல் 1ம் தேதி முதல் 2013 மாா்ச் 31ம் தேதி வரையிலும், ரூ.25,000 மற்றும் ரூ.50,000 செலுத்தும் சுயநிதி திட்டங்களின் கீழ் 2018 மாா்ச் 31ம் தேதி வரையிலும் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கு மின் இணைப்பு வழங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

விவசாய மின் இணைப்புக்கு பதிவு செய்துள்ள விண்ணப்பதாரா்களின் பெயா் மாற்றம், சா்வே எண் மாற்றம் ஆகியவை பதிவு செய்துகொள்ள விழுப்புரம் கோட்டத்தில் வியாழக் கிழமை(நவம்பர 24) சிறப்பு முகாம் நடந்தது.

பெயா் மாற்றத்துக்கு இறப்பு, வாரிசு சான்றிதழ்கள், கூட்டுப்பட்டாதாரா்கரா்களின் ஆட்சேபனை இல்லா கடிதம் அல்லது பிணையுறுதிப் பத்திரம், வருவாய் அலுவலா் சான்றிதழ், வரைபடம் ஆகியவற்றைக் கொண்டுவர வேண்டும்.

சா்வேச எண் மாற்றத்துக்கு பழைய, புதிய கிணற்றின் வருவாய் அலுவலர் சான்றிதழ், வரைபடம்ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Viluppuram S22p13