முகப்பு /விழுப்புரம் /

சிவராத்திரியை முன்னிட்டு விழுப்புரம் கைலாசநாதர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்..! 

சிவராத்திரியை முன்னிட்டு விழுப்புரம் கைலாசநாதர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்..! 

X
கைலாசநாதர்

கைலாசநாதர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

Viluppuram News : விழுப்புரம் அருகே திரு.வி.க வீதியில், பிரசித்தி பெற்ற  கைலாசநாதர் கோயில் உள்ளது. இந்த  கோயிலில் மகா சிவராத்திரி மற்றும் சனி பிரதோஷம் மிக  விமர்சையாக  நடைபெற்று வருகிறது. கோயிலில் 1008 சங்குகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் திரு.வி.க வீதியில் அமைந்துள்ள பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதியில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இக்கோயிலின் மூலவர் சிவபெருமானுக்கு மகா சிவராத்திரி திருவிழா சிறப்பாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் சிவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் விமர்சையாக செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிவனுக்கு 1008 சங்குகள் கொண்ட அபிஷேகமும் நடைபெறவுள்ளது. இதையொட்டி சங்குகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மகா சிவராத்திரி மற்றும் சனி பிரதோஷம் இரண்டும் ஒரே நாளில் வந்ததால் பக்தர்கள் அனைவரும் கோயிலுக்கு வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். மேலும் மாலை 4 மணிக்கு பிரதோஷ பூஜைகள், மாலை 6:00 மணிக்கு முதல் கால பூஜையும், இரவு 9 மணிக்கு 2ம் கால பூஜையும், இரவு 11 மணிக்கு சிவபெருமானுக்கு 3ம் கால பூஜையில் 1008 சங்குகள் கொண்டு சங்கா அபிஷேகம் ஆகியவை விமர்சையாக நடைபெறும் என்று கோயில் நிர்வாகி தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Villupuram