முகப்பு /விழுப்புரம் /

தென்னிந்திய அளவிலான கபடி போட்டிகள் விழுப்புரத்தில் தொடங்கியது..!

தென்னிந்திய அளவிலான கபடி போட்டிகள் விழுப்புரத்தில் தொடங்கியது..!

X
கபடி

கபடி போட்டி தொடக்கம்

Villupuram News | ஆண்கள் மற்றும் பெண்கள் அணி என தனித்தனியாக போட்டிகள் நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் நகர திமுக சார்பில்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்  70வது பிறந்தநாளை முன்னிட்டு தென்னிந்திய அளவிலான மாபெரும் கபடி போட்டிகள் தொடங்கியது.

விழுப்புரம் நகர தி.மு.க சார்பில் தென்னிந்திய அளவிலான கபடி போட்டி புதிய பேருந்து நிலையம் அருகே தளப‌தி திடலில் நான்கு நாட்கள் மின் ஒளியில் நடைபெற உள்ளது. இதில்  தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் இருந்து 37 அணிகள் பங்கேற்கவுள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில் இது போன்ற பெரிய அளவிலான கபடி போட்டிகள் ஏதும் இதுவரை நடைபெறவில்லை. முதல் முறையாக இந்த போட்டி நடைபெறவுள்ளதால் விழுப்புரம் சுற்றியுள்ள மற்றும் இதர மாவட்டத்தில் இருந்து ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் கபடி போட்டியை மிகவும் ரசித்து பார்த்து வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஆண்கள் மற்றும் பெண்கள் அணி என தனித் தனியாக போட்டிகள் நடைபெற உள்ளன. இதில், வெற்றிபெறும் அணிகளுக்கு நாளை பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இறுதிப் போட்டியை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் துவக்கி வைக்க உள்ளார். மேலும் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பரிசுகளை வழங்கி சிறப்புரை வழங்க உள்ளார்.

First published:

Tags: Local News, Villupuram