முகப்பு /விழுப்புரம் /

தீயணைப்புத் துறையில் இத்தனை பொருட்களா? ஆச்சரியத்துடன் கண்டு களிக்கும் விழுப்புரம் மாணவர்கள்! 

தீயணைப்புத் துறையில் இத்தனை பொருட்களா? ஆச்சரியத்துடன் கண்டு களிக்கும் விழுப்புரம் மாணவர்கள்! 

X
தீ

தீ பாதுகாப்பு விழிப்புணர்வு

Viluppuram news | விழுப்புரம் தீயணைப்பு நிலையத்தில் தீ பாதுகாப்பு வாரம் ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கி வரும் 20ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் தீயணைப்பு நிலையத்தில் தீ பாதுகாப்பு வாரம் ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கி வரும் 20ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதற்காக தீ பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டு களிக்கின்றன.

இந்த கண்காட்சியில், மாவட்டத்தில் பயன்படுத்தப்படும் தீயணைப்பு வாகனங்கள், தீ விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தீ பாதுகாப்பு குறித்து செயல் விளக்க பயிற்சி, தீ தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த கண்காட்சியை மாணவர்கள், பொதுமக்கள் தினசரி காலை 8:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நேரில் பார்வையிட்டு, செயல் விளக்கம் குறித்து கேட்டறிந்து பயன்பெறலாம். மேலும் பள்ளி மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தீயணைப்புத் துறை வீரர்கள் புரியும் வகையில் எளிமையாக செயல்முறை விளக்கம் செய்து காட்டினர். பின்னர் மாணவர்களும் தாங்களாக முன்வந்து அதனை செய்து பார்த்தனர்.

இது குறித்து தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலர் ராஜேஷ்கண்ணா கூறுகையில், இக்கண்காட்சியில், தீயணைப்பு மீட்பு வாகனங்கள், பேரிடர் கால மீட்புக்கான நவீன போட்டுகள், ஆபத்து காலங்களில் மீட்பு பணி மேற்கொள்ளும் துளையிடும் கருவிகள், கட்டர்கள், பலவகை நவீன அறுவைக் கருவிகள், கீழே விழுந்து கிடக்கும் மரங்களை தூக்கும் நவீன காற்று மரம் துாக்கி, விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முதல் உதவிக்கான மூச்சு கருவிகள் போன்றவை இடம் பெற்றுள்ளன.

மேலும், தலைக்கவசங்கள், நவீன ஏணிகள், லைப் ஜாக்கெட், பாம்பு பிடி கருவிகள், தேடுதல் பணிக்கு பயன்படும் மின்விளக்குகள், கயிறுகள், பவர் அறுவை கருவிகள், அவசரகால கோபுர மின்விளக்கு போன்ற ஏராளமான சாதனங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. நிச்சயமாக இதனை பள்ளி மாணவர்கள் வருகை புரிந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

அத்துடன், மாணவரின் பாடல் புத்தகத்தில் தீயணைப்பு துறை பகுதி வந்தால் சிறப்பாக இருக்கும் எனவும் கோரிக்கையும் வைத்தார்.

அதேபோல் பேரிடர், மழைக் காலங்கள், தீ விபத்து காலங்களில் எவ்வாறு செயல்படுவது, மீட்பு பணிகளில்எவ்வாறு ஈடுபடுவது. எப்படி முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்வது என்பது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர். ஏப்ரல் 20ஆம் தேதி வரை இந்த கண்காட்சி நடக்க இருப்பதால் பொதுமக்கள், மாணவர்கள் இதனை தவறாமல் பார்வையிட்டு பயன்பெற வேண்டும் என விழுப்புரம் மக்களை தீயணைப்புத் துறையினர் கேட்டுக்கொண்டனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Viluppuram S22p13