முகப்பு /விழுப்புரம் /

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்கள்.. விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் வழங்கினார்..

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்கள்.. விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் வழங்கினார்..

X
மாற்றுத்திறனாளி

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்கள்

Villupuram News | 18 வயதிற்கு மேற்பட்ட செவித்திறன், வாய் பேசாத மற்றும் பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட்போன் வழங்கும் சிறப்பு முகாம் விழுப்புரத்தில் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட செவித்திறன், வாய் பேசாத மற்றும் பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து நவீன செயலிகளுடன் கூடிய திறன்பேசிகள் (smartphone ) வழங்குவதற்காக நடைபெற்ற சிறப்பு முகாமில் 5 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 67,745 ரூபாய் மதிப்பீட்டில் திறன்பேசியினை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி வழங்கினார்.

பின்னர் விழாவில் ஆட்சியர் பழனி பேசுகையில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகள் பிறர் உதவியின்றி சுயமாக செயல்பட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித் தொகையை உயர்த்தி வழங்கியும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கி மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை காத்து வருகிறார்.

அது மட்டுமல்லாமல், மாவட்டங்களில் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வயது தளர்வுக்கான சிறப்பு முகாம் நடத்தி உதவித்தொகையும், பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய திறன் பேசிகள் வழங்கிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : 5 தலை நாகம் பாதுகாத்து வரும் 2,000 ஆண்டுகள் பழமையான போடி கீழச்சொக்கநாதர் கோயில் பற்றி தெரியுமா?

அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வயது தளர்வு முகாம் நடத்தப்பட்டு மருத்துவர்கள் அறிவுரையின்படி தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து 18 வயதிற்கு மேற்பட்ட செவித்திறன், வாய் பேசாத மற்றும் பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து நவீன செயலிகளுடன் கூடிய திறன் பேசிகள் (smartphone ) வழங்குவதற்கு தகுதியான பயனாளிகளை தேர்வு செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமில் செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் குறைபாடு கண்டறியும் மருத்துவர்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் தலா 13549 ரூபாய் மதிப்பீட்டில் 5 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நவீன செயலிகளுடன் கூடிய திறன் பேசிகள் (smart phone ) வழங்கப்பட்டன” என தெரிவித்தார்.

இம்முகாமில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர் விஜயகுமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், தங்கவேலு உட்பட பலர் உடனிருந்தனர்.

First published:

Tags: Local News, Villupuram