விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பெய்த கடுமையான பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி.
பகலில் பனிப்பொழிவு அதிகரிப்பால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. அதிகாலை வேலைக்கு செல்பவர்கள் கடும் பனிப்பொழிவால் அவதி அடைந்து வருகின்றனர்.
பருவநிலை மாற்றம் காரணமாக கடுமையான பனிப்பொழிவு கடந்த சில தினங்களாக பெய்து வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் இன்று காலை கடுமையான பனிப்பொழிவு பெய்தது.இதன் காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி ஊர்ந்து சென்றது.
எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பணி முழுவதும் சாலையை மறைத்துள்ளது ஏதாவது விபத்துக்கள் மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் வாகன ஓட்டிகள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றனர். வாகன ஓட்டிகள் அனைவரும் வாகனங்களில் உள்ள முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி செல்கின்றனர்.
மேலும் படிக்க : ஒரு காலை தூக்கி உயர்ந்து நிற்கும் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாளை வழிபடுவதால் இத்தனை நன்மைகள் ஏற்படுமா?
மேலும் மரக்காணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கடும் பனிப்பொழிவு காரணமாக கிழக்கு கடற்கரை சாலைகளிலும் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றனர்.இந்த கடுமையான பனிப்பொழிவு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
கடும் பனிப்பொழிவு இருந்தால் பயிர் விளைச்சல் பாதிக்கும். மார்கழி மாதம் பிறக்காத நிலையில் தற்போது இவ்வளவு பனி காணப்படுவதால் இன்னும் மார்கழி மாதத்தில் எவ்வளவு பனி காணப்படுமோ என விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Villupuram