ஹோம் /விழுப்புரம் /

பட்டுக்கு பெயர் போன விழுப்புரம் சிறுவந்தாடு.. கண்ணைக் கவரும் தீபாவளி சேலை கலெக்‌ஷன்கள் அறிமுகம்..

பட்டுக்கு பெயர் போன விழுப்புரம் சிறுவந்தாடு.. கண்ணைக் கவரும் தீபாவளி சேலை கலெக்‌ஷன்கள் அறிமுகம்..

பட்டு

பட்டு சேலைகளுக்கு பெயர் போன விழுப்புரம் சிறுவந்தாடு..

Villupuram Siruvanthaadu Silk Sarees | பட்டு என்றாலே பட்டென்று நினைவுக்கு வருவது காஞ்சிபுரம் பட்டுதான். இனி, விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு பட்டும் நினைவுக்கும் வரும். சிறுவந்தாடு ஊருக்கு சென்றாலே எங்கு பார்த்தாலும் பட்டு சென்டர் மட்டும் கண்ணில் தென்படும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

விழுப்புரம் அடுத்த சிறுவந்தாடு பகுதி பட்டுக்கு பெயர் போனது ஆகும். இங்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு சேலைகளில் விதவிதமான கலெக்ஷன்ஸ் வந்துள்ளது. தீபாவளிக்கு என சிறப்பு புடவைகள் வாங்குவதற்கு பொதுமக்கள் சிறுவந்தாடு பகுதிக்கு அதிகளவில் வருகை புரிகிறார்கள்.

பட்டு என்றாலே பட்டென்று நினைவுக்கு வருவது காஞ்சிபுரம் பட்டுதான். இனி, விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு பட்டும் நினைவுக்கும் வரும். சிறுவந்தாடு ஊருக்கு சென்றாலே எங்கு பார்த்தாலும் பட்டு சென்டர் மட்டும் கண்ணில் தென்படும்.

அந்தவகையில் கண்ணுக்கு தென்பட்ட உதயா பட்டு சென்டருக்கு உள்ளே நுழைந்தோம். உள்ளே சென்று பார்த்தால் கண்ணுக்கு பல வண்ணங்களில் முழுவதுமாக பட்டு சேலையில் நிறைந்துள்ளது. அதன் பின் கடை உரிமையாளரிடம் பேச்சுக் கொடுத்து சிறுவந்தாடு பட்டு குறித்தும் தீபாவளிக்கு வருகைபுரிந்த புதிய ரகத்தை குறித்தும் பல்வேறு சுவாரசியமான விஷயங்களை தெரிந்து கொண்டோம்.

மேலும் படிக்க:  தமிழர் கட்டிடக்கலை வரலாற்றில் திருப்புமுனை... மண்டகப்பட்டு கோவில்! - இந்த கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!

தமிழகத்தில் பல தொழில்களில் ஒன்றாக நெசவுத்தொழில் முக்கிய பங்காற்றி வருகிறது. வேட்டி, புடவை, துண்டு போன்ற உடைகளை தயாரிக்கும் கலை நெசவுக்கலை.

விழுப்புரம் சிறுவந்தாடு..

இன்றைக்கும் பொதுமக்கள் திருமணம்,தீபாவளி, பொங்கல்,புதுமனை புகுவிழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் அனைத்திலும் பட்டுச்சேலைகளை அணிவதிலும் வாங்குவதிலும் பெண்கள் அதிக அளவில் கவனம் செலுத்தி வருவார்கள்.

மேலும் படிக்க:  விழுப்புரத்தின் உண்மையான பெயர் என்ன தெரியுமா? - தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க.!

தமிழகத்தை பொறுத்தவரை பட்டு என்றாலே பலரது மனதிலும் பட்டென்று நினைவுக்கு வரும் இடம் காஞ்சிபுரம் தான். அதுபோல, விழுப்புரம் அடுத்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சிறுவந்தாடு என்ற கிராமம்.இங்கு காலம், காலமாக பட்டு சேலை உற்பத்தியில் நெசவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதுவும் கைத்தறி மூலம் பட்டு சேலைகளை நெய்து வருகின்றனர்.

விழுப்புரம் சிறுவந்தாடு..

இக்கிராமத்தில் பலரது பிராதான தொழிலாக புடவை நெய்வது, விற்பனை செய்வதும் ஆகும்.ஒரு சிலர் சொந்தமாக கைத்தறி கொண்டும் நெசவு செய்து வருகிறார்கள், ஒரு சிலர் கூலி தொழிலுக்கும் சென்று நெசவு செய்து தருகிறார்கள்.

மேலும் படிக்க: விஜய் படமே இங்கதான் எடுத்திருக்காங்க பாருங்களேன்..! இந்த கோயில்ல இத்தனை படங்கள ஷூட் பண்ணிருக்காங்களா?

இந்த கிராமத்தில் குறைந்த பட்சம் 4000 நபர்களுக்கு மேல் நெசவு தொழில் செய்து வருகிறார்கள். இங்கு நெசவும் பட்டு புடவைகள் கள்ளக்குறிச்சி, பெங்களூர், தெலங்கானா, திருக்கோயிலூர், சென்னை, பாண்டிச்சேரி, கடலூர், திருவண்ணாமலை ஏன் காஞ்சிபுரத்துக்கும் செல்கிறது.

விழுப்புரம் சுற்றியுள்ள பல பகுதிகளில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் திருமண உள்ளிட்ட வைபவங்களுக்கு பட்டுப்புடவைகள் வாங்க சிறுவந்தாடுக்கு தான் வருவார்கள். காஞ்சிபுரம் பட்டு புடவைக்கும் சிறுவந்தாடு பட்டு புடவைக்கும் என்ன வித்தியாசம் என்றால், காஞ்சிபுரத்தில் 4 இழைகளைக் கொண்டு பட்டுப்புடவைகள் நெய்யப்படும், சிறுவந்தாட்டில் ஐந்து இழைகளைக் கொண்டு பட்டுப்புடவைகள் நெய்யப்படும்.

விழுப்புரம் சிறுவந்தாடு..

விழுப்புரம் மாவட்டத்தில்,சிறுவந்தாடு பட்டு என்றாலே தனி சிறப்பு தான். அதுமட்டுமல்லாமல், தீபாவளி வருவதற்கு இன்னும் 10 நாட்களில் இருக்கையில், சிறுவந்தாடு பகுதியில் பட்டு சேலைகளில் அதிக வகைகள் வந்துள்ளது. இதன் விலையும் குறைவாக இருப்பதால் பொதுமக்கள் பட்டுச்சேலைகள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க: தஞ்சை ராஜராஜ சோழனின் மனைவி புதைக்கப்பட்ட இடம் இதுதானா! - பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை கோவில்

திருமணத்திற்கு என புதிய ரகங்கள், பண்டிகைக்கு என புதிய ரகங்களான காட்டன் சில்க்ஸ், பியூர் காட்டன் சில்க்ஸ் , காப்பர் ஜரிகை பட்டு சேலைகள், ஃபுல் காப்பர் ஜரிகை பட்டுப்புடவை என பல்வேறு வகையான விதங்களில் பட்டு சேலைகள் உள்ளன.

தீபாவளிக்கு என புது ரகமா ககாபரிய வைத்த பட்டு சேலை வந்துள்ளது. அதில் குறிப்பாக குறைந்த மெலிசான குறைந்த எடை கொண்ட காப்பர் ஜரிகை வைத்த சில்க் காட்டன் சேலையில் வாங்குவதற்கு பெண்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த ரகத்தில் பல ரகங்கள் உள்ளன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விலையும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றமாதிரி குறைந்த விலையில் இருக்கிறது.2000 ரூபாய் முதலே பட்டு சேலையின் விலை ஆரம்பமாகிறது. அதுவும் கைத்தறி பட்டு சேலைகள் என்பதால் மக்கள் இப்போது இருந்தே தீபாவளிக்கு உடைகள் வாங்குவதற்கு கடைகளுக்கு வருகின்றனர் என கடையின் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram