Home /viluppuram /

மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றவர்களின் பசியாற்றும் இளைஞர்கள்.. தேடிச் சென்று உணவளிக்கும் மனிதநேயம்..

மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றவர்களின் பசியாற்றும் இளைஞர்கள்.. தேடிச் சென்று உணவளிக்கும் மனிதநேயம்..

விழுப்புரம்

விழுப்புரம்

Villupuram Latest News : விழுப்புரம் மாவட்டம் தோகைப்பாடி கிராமத்தை சார்ந்த இளைஞர்கள் ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு காலை உணவு அளித்து உதவி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள், அந்த வகையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், நான்கு முனை சந்திப்பு போன்ற பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றவர்கள், பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து வாழ்வாதாரம் ஈட்டுவோர்  போன்ற நபர்களுக்கு, காலை உணவை அளித்து வருகின்றனர் விழுப்புரம் தோகைப்பாடி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள்..

ஏழைகளுக்கு உணவளிப்பது குறித்து தன்னார்வலரான வீரபாலன் கூறியதாவது, “நான் இளங்கலை வேதியல் படிப்பை முடித்துள்ளேன். தற்போது ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். எங்கள் குழுவினர் முதன்முதலாக திருவண்ணாமலையில் கிரிவலம் செல்பவர்களுக்கு இலவசமாக உணவு அளித்து வந்தோம்.

அதன்பிறகு கொரோனா காலகட்டத்தில் ஏழைகளின் வீடுகளுக்கே சென்று உணவுகளை வழங்கி வந்தோம். அதன்பிறகு இந்த சிறிய முயற்சி ஏன் பெரிய முயற்சியாக இருக்க கூடாது என கருதி, அன்பின் ஒளி அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளையை செங்கல்பட்டில் ஆரம்பித்தோம்.

ஆதரவற்றவர்களின் பசியாற்றும் இளைஞர்கள்


இந்த அறக்கட்டளையின் தலைவராக சீனிவாசன் செயலாளராக நானும் இருக்கிறோம். அதன் பிறகு  அறக்கட்டளையின் கிளைகளை பல்வேறு மாவட்டங்களில் தொடங்கினோம்.

தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் இந்த அறக்கட்டளை தொடங்கி 152 நாட்கள் ஆகிறது. நம்மால் முடிந்த அளவிற்கு ஒரு வேளை உணவையாவது இல்லாதவர்களுக்கு கொடுத்து பசியாற்ற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

தற்போது இந்த குழுவில் 150க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 35க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு காலை உணவாக இட்லி, வடை  வழங்கி வருகிறோம். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் நான்குமுனை சந்திப்பு, ரயில்வே நிலையம் போன்ற பகுதிகளுக்கு சென்று உணவு பொட்டலங்களை வழங்கி வருகிறோம்.

ஆதரவற்றவர்களின் பசியாற்றும் இளைஞர்கள்


அதுமட்டுமல்லாமல் திருமண மண்டபத்தில், மிச்சமாகும் உணவுகளையும் சேகரித்து, தேவைப்படும் ஏழைகளுக்கு அளித்து வருகிறோம். ஒரு சிலர் தங்களுடைய பிறந்தநாள் அல்லது திருமண நாட்கள் போன்ற நாட்களில் எங்களை அழைத்து அவர்களால் முடிந்த உணவு மற்றும் பண உதவியை வழங்கி மற்றவர்களுக்கு உணவு வழங்க சொல்லுவார்கள் அதையும் செய்து வருகிறோம். இதனை நாங்கள் மனத்திருப்தியுடன் செய்து வருகிறோம்.

ஆதரவற்றவர்களின் பசியாற்றும் இளைஞர்கள்


இந்த அறக்கட்டளையின் அடுத்தகட்ட முயற்சியாக மதிய உணவும் வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.  நல் உள்ளங்கள் கொண்ட தன்னார்வலர்களை நாங்கள் வரவேற்கிறோம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் எங்களுக்கு உதவ  நினைப்பவர்களும் அல்லது எங்கள் குழுவில் இணைய விரும்பும் தன்னார்வலர்கள் 8489476131 எண்ணிற்கு அழைத்து தங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம் என வீரபாலன் கூறினார்.
Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram

அடுத்த செய்தி