Home /viluppuram /

கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு உற்சாகத்துடன் வந்த மாணவர்கள்..

கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு உற்சாகத்துடன் வந்த மாணவர்கள்..

பள்ளிகள்

பள்ளிகள் திறப்பு

Villupuram District: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இந்த கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இன்று மாணவர்களுக்கு தரப்பட்டது.

மேலும் படிக்கவும் ...
    கோடை விடுமுறை முடிவடைந்து, இன்று பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள்  மகிழ்ச்சியுடன் பள்ளி வளாகத்தில் நுழைந்தனர். மாணவர்களை ஆசிரியர்கள் புன்னகையுடன் வரவேற்று இனிப்பு மற்றும் குங்குமம் வைத்து வரவேற்றனர்.

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, இன்று 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது . இதேபோன்று, 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 27ம் தேதியும், +2 மாணவர்களுக்கு வரும் 20ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதைெயாட்டி, தலைமை செயலர் இறையன்பு உத்தரவின்பேரில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இந்த கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இன்று மாணவர்களுக்கு தரப்பட்டது.
    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1806 பள்ளிகளிலும் பாடப்புத்தகம் விநியோகிக்கபட்டது .

    பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளான இன்று பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு அழைத்து வந்து பள்ளி வளாகத்தினுள் விட்டு சென்றனர். மேலும் விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மகிழ்ச்சியுடன் பள்ளி வளாகத்தினுள் நுழைந்த மாணவர்களை ஆசிரியர்கள் இனிப்பு வழங்கியும் குங்குமம் வைத்தும் வரவேற்பு அளித்தனர்.

    மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பள்ளி மாணவர்கள் 100% பள்ளி படிப்பு மற்றும் விளையாட்டு போன்றவற்றில் தங்களுடைய பன்முக திறனை கண்டிப்பாக முழு வீச்சு செயல்பட ஆசிரியர்கள் உறு துணையாக நிற்போம் என விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா கூறினார்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி