விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அகில் மரங்களை பாதுகாப்பது குறித்து, பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஓவியம் வரையும் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் பழனி தொடங்கி வைத்தார்.
அப்போது ஆட்சியர் கூறுகையில், “முதலமைச்சர் தமிழ்நாட்டில் பசுமைப்போர்வை திட்டத்தின் கீழ் பசுமைக் காடுகளை உருவாக்கிடவும், புவிவெப்பமயமாதலை தடுத்திடவும், உரிய பருவ காலங்களில் பருமழை பெய்திடவும், பொதுமக்களுக்கு சுத்தமான இயற்கை காற்று கிடைத்திடவும், சுகாதாரமான சூழலை ஏற்படுத்திக்கொடுத்திடும் பொருட்டு, அரசுக்கு சொந்தமான இடங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், வீடுகள், விவசாய நிலங்கள் போன்ற இடங்களில் அதிகளவில் மரக்கன்றுகள் நட்டு பாதுகாத்திட உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மரங்கள் வளர்ப்பது குறித்தும், மரங்களை பாதுகாப்பது குறித்தும் பொதுமக்களிடையே போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில், பசுமை போர்வையினை உருவாக்கிடும் வகையில், அரசுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் பெருமளவில் மரக்கன்றுகள் நட்டு பசுமைக்காடுகள் திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.
மேலும், அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக அகில் மரங்களை பாதுகாப்பது குறித்து பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஓவியம் வரையும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டு பொதுமக்களிடையே மரங்களை வளர்ப்பது மற்றும் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவர்கள் நீண்ட துணியில், தூரிகைகளைக் கொண்டு மரங்களை பாதுகாக்க வேண்டும் என்ற தலைப்பின் கீழ் பல்வேறு வகையான ஓவியங்களை வரைந்தனர்.
இதையும் படிங்க : "எங்க கிராமத்துல நூலகம் அமைத்து கொடுங்க" மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சிறுமி!
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், அரசு மேல்நிலைப்பள்ளி மழவந்தாங்கல், நல்லான் பிள்ளை பெற்றால், அரசு உயர்நிலைப்பள்ளி, தேவதான பேட்டை, கணக்கன் குப்பம், தடாகம், மலையரசன் குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, இடையஞ்சாவடி உதவி நிதி பள்ளி ஆரோவில் மற்றும் ஐக்கியம் பள்ளி ஆரோவில் ஆகிய பள்ளிகளில் இருந்து 100க்கு மேற்பட்ட மாணவர்கள் இந்த நிகழ்ச்சியை கலந்து கொண்டனர். மேலும் இந்த அனுபவம் மிகவும் சிறந்ததாக இருந்தது என பள்ளி மாணவர்களை தெரிவித்தனர். மேலும்,பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் தங்கள் பகுதிகளில் மரங்களை நட்டு வளர்த்து பாதுகாத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பழனி கேட்டுக்கொண்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Villupuram