முகப்பு /விழுப்புரம் /

‘எங்க ஊருக்கு நூலகம் வேணும்’ - விழுப்புரம் ஆட்சியரிடம் மனு அளித்த பள்ளி மாணவி

‘எங்க ஊருக்கு நூலகம் வேணும்’ - விழுப்புரம் ஆட்சியரிடம் மனு அளித்த பள்ளி மாணவி

X
விழுப்புரம்

விழுப்புரம் ஆட்சியரிடம் மனு அளித்த பள்ளி மாணவி

Villupuram News | பள்ளி மாணவர்கள் பல விஷயங்களை தெரிந்து கொள்வதற்கு இந்த நூலகம் நிச்சயம் உதவியாக இருக்கும் என்பதால் எங்கள் பள்ளிக்கு ஒரு நூலகம் அமைத்து தர வேண்டும் என்று சிறுமி கோரிக்கை வைத்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா திருமலைப்பட்டு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு நூலகம் அமைத்து தர வேண்டி அந்த பள்ளியை சேர்ந்த ஒரு மாணவி ஆட்சியரிடம் மனு அளித்தார்.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகாவில் உள்ள திருமலைப்பட்டு கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. பள்ளியில் மொத்தம் 28 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் நூலகம் இல்லாதது மிகவும் சிரமமாக இருக்கிறது என மாணவி வருணிதா தெரிவித்தார். மேலும் இதுபற்றி மாணவி வருணிதா கூறியதாவது, "நான் திருமலைபட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறேன். எங்கள் பள்ளியில் மொத்தம் 28 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி வேலை நேரம் முடிந்தவுடன், ஊரின் அருகிலுள்ள காட்டுக்கு சென்று விளையாடுவார்கள். அப்படி காட்டுக்குள் சென்று விளையாடும் போது விஷ ஜந்துக்களால், மற்ற பூச்சிகளால் நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர் .

மேலும் பாட புத்தகத்தை தவிர மற்ற திறமைகள், அறிவை வளர்த்துக் கொள்வதற்கு நிச்சயமாக எங்கள் பள்ளிக்கு ஒரு நூலகம் வேண்டும் எனவும் பள்ளி மாணவர்கள் பல விஷயங்களை தெரிந்து கொள்வதற்கு இந்த நூலகம் நிச்சயம் உதவியாக இருக்கும் என்பதால் எங்கள் பள்ளிக்கு ஒரு நூலகம் அமைத்து தர வேண்டும்” என்று சிறுமி கோரிக்கை வைத்தார். அதோடு நூலகம் அமைத்து தர வேண்டி மனு ஒன்றையும் எழுதி ஆட்சியர் பழனியிடம் அளித்தார்.

இதையும் படிங்க :தனியாக பேசியபோது விபரீதம்.. காதலனுக்கு கத்திக்குத்து.. சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்.. விக்கிரவாண்டி அருகே பரபரப்பு!

இதற்கு ஆட்சியர் உடனடியாக பள்ளிக்கு நூலகம் அமைத்து தருவேன் என வாக்களித்ததாக மாணவி தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் மனு அளிக்க வந்த சிறுமியை நன்றாக படிக்க சொன்னார்.

First published:

Tags: Local News, Villupuram