முகப்பு /விழுப்புரம் /

98’ பேட்ச்.. 24 வருடங்களுக்கு பின் பள்ளி தோழிகளுடன் மீண்டும் சந்திப்பு.. விழுப்புரத்தில் நெகிழ்ச்சி..

98’ பேட்ச்.. 24 வருடங்களுக்கு பின் பள்ளி தோழிகளுடன் மீண்டும் சந்திப்பு.. விழுப்புரத்தில் நெகிழ்ச்சி..

X
விழுப்புரம்

விழுப்புரம்

Villupuram School Reunion : விழுப்புரம் மருதூரில் உள்ள அரசு நிதி பெறும் மகாத்மா காந்தி உயர்நிலைப் பள்ளியில் 1997-98 ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடந்தது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

விழுப்புரம் மருதூரில் உள்ள அரசு நிதி பெறும் மகாத்மா காந்தி உயர்நிலைப் பள்ளியில் படித்த, 1997- 98 பேட்ச் பத்தாம் வகுப்பு மாணவிகள், 24 ஆண்டுகளுக்கு மீண்டும் ஒன்றாக சந்தித்து தங்களுடைய மலரும் நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர்.

விழுப்புரம் மருதூரில் உள்ள அரசு நிதி பெறும் மகாத்மா காந்தி உயர்நிலைப் பள்ளியில் 1997-98 ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடந்தது.

தங்களுடன் ஒன்றாக படித்து திருமணமாகி, வேறு வேறு ஊர்களில்  செட்டில் ஆகிய மாணவிகள் ஒருவரை ஒருவர் மீண்டும் சந்திக்க விரும்பினர்.  தாங்கள் படித்த பள்ளியிலேயே இந்த சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த அவர்கள் திட்டமிட்டனர்.

24 வருடங்களுக்கு பின் ஒன்றிணைந்த பள்ளி தோழிகள்..

அதன்படி, ரீயூனியன் நிகழ்ச்சி நடத்த தேதி முடிவானது. அந்த பேட்சில் தங்களுடன் படித்த  34 மாணவியரில் 27 பேர் இப்பள்ளிக்கு  வந்தனர். அப்போது, பள்ளிப் பருவத்தில் தங்களுக்கு கிடைத்த, அனுபவித்த மலரும் நினைவுகளை ஒருவருக்கொருவர் மீண்டும் நினைவுகூர்ந்தனர்.

ஒருவருக்கொருவர் முத்தமிட்டு அன்பை பகிர்ந்த தோழிகள்..

வளர்ந்து பெரியவர்கள் ஆன போதிலும், ஆண்டுக்கணக்கில் பார்த்துக்கொள்ளாத போதிலும், அவர்களின் நட்பு மீண்டும் புதிதாய் துளிர்விட்டது. ஒருவரை ஒருவர் அரவணைத்து, முத்தமிட்டுதங்களுடைய அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர். இந்த சந்திப்பு தங்களுக்கு முக்கியம் என்பதால் கனடா, போன்ற வெளிநாடுகளில் இருந்தும்,. பெங்களூரு போன்ற வேறு மாநிலங்களில் இருந்தும் தங்களின் மு(இ)ன்னாள் பள்ளி தோழிகளை காண அவர்கள் வந்திருந்தனர்.

ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகம்

மேலும், தங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களையும் மறக்காமல் வரவழைத்து,  கேக் வெட்டி பூங்கொத்து கொடுத்து மகிழ்ந்தனர்.

' isDesktop="true" id="791322" youtubeid="czpGVnCngKo" category="viluppuram">

ஆட்டம், பாட்டம்,  விளையாட்டு என மகிழ்ச்சியில் மீண்டும் பள்ளி பருவத்திற்கே சென்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த ரியூனியன் எங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. எங்கள் பள்ளிப் பருவத்தில் படித்த அனைவரும் மீண்டும் சந்திப்போம் என நாங்கள் நினைக்கவில்லை. இந்த சந்திப்பு அளவற்ற மகிழ்ச்சியை தந்துள்ளது என புன்னகையுடன் கூறினார்கள் அந்த பள்ளி தோழிகள்.

First published:

Tags: Local News, Villupuram