விழுப்புரம் மாவட்ட தொழில் மையம், அண்ணன் அம்பேத்கர் வெல்லும் தொழில் முனைவோர் - பிசினஸ் சாம்பியன்ஸ் சார்பாக கருத்தரங்கத்தில், சமூக நீதியிலும் சமத்துவத்திலும் பற்றுறுதி கொண்ட தமிழ்நாடு அரசு எஸ்.சி மற்றும் எஸ்டி தொழில் முனைவோருக்கான செயல்படுத்தப்படும் தனிச்சிறப்பு திட்டம் உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவு தனிநபர், அப்பிரிவினருக்கு உரிமையான தனியுரிமை அலகுகள், பங்குதாரர் கூட்டான்மைகள், ஒரு நபர் கம்பெனி பிரைவேட் லிமிடெட் கம்பெனியில் பயன்பெறலாம். திட்டத்தில் புதிய தொழில் திட்டங்கள் மட்டுமன்றி இயங்கிக் கொண்டிருக்கின்ற அலகுகளின் விரிவாக்க, பல்துறையாக்க, நவீனமாக்க மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கும் பயன்படுத்தலாம்.
பயன்பெறுபவர்களின் தகுதிகள்
கல்வி தகுதி தேவையில்லை. குடும்ப ஆண்டு வருமானம் வரவில்லை. இத்திட்டத்தின் திட்ட தொகையில் 65% வங்கி கடன் 35%, அரசு மானியம் வங்கிக்கடன் திரும்பச் செலுத்தும் காலம் முழுதும் 6% வட்டி மானியம்.
சேவை சார் தொழில் திட்டங்கள்
உணவு பதப்படுத்துதல், ஆட்டோ காம்போனட்ஸ் தயாரிப்பு, ஆயத்த ஆடைகள் தைத்தல், தென்னை நார் பொருட்கள் உற்பத்தி, பல்பொருள் அங்காடி வணிகப்பொருட்கள் மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை,ஐடி ஹார்டுவேர்ஸ் சாப்ட்வேர், BPO, ஆட்டோ மொபைல்ஸ் சர்வீஸ்,அழகு நிலையம்,உடற்பயிற்சி கூடம், கழிவு மேலாண்மை, பயணியர் மற்றும் சரக்கு போக்குவரத்து,ஜேசிபி, ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி உள்ளிட்டவைகள்.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் ஆதர அட்டை, குடும்ப அட்டை,வகுப்பு சான்றிதழ், திட்டறிக்கை,விலை புள்ளி (quotation) இத்திட்டத்தில் விண்ணப்பிக்க www.msmeonline.tn. gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டம் குறித்து கூடுதல் விவரங்கள் பெறுவதற்கு மாவட்ட தொழில் மையம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விழுப்புரம் - 605 602
Email- dicvpm@gmail.com. பொது மேலாளர் - 04146-223616,9443728015 என்ற எண்ணிற்கு தொடர்பு விவரங்கள் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Villupuram