முகப்பு /விழுப்புரம் /

மரக்காணம் பகுதியில் வெயிலின் தாக்கத்தால் உப்பு உற்பத்தி அதிகரிப்பு..

மரக்காணம் பகுதியில் வெயிலின் தாக்கத்தால் உப்பு உற்பத்தி அதிகரிப்பு..

X
மரக்காணம்

மரக்காணம் பகுதியில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு

Villupuram News | தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கோடை வெயில் காரணமாக, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உப்பு உற்பத்தி அதிகரித்து வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கோடை வெயில் காரணமாக, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உப்பு உற்பத்தி அதிகரித்து வருகிறது. 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பளம் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக அதிக அளவு உப்பு உற்பத்தி செய்யப்படும் இடமாக இருக்கிறது மரக்காணம். இங்கிருந்து, ஆண்டு தோறும் சுமார் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு தாயாராகும் உப்பு, அண்டை மாநிலங்களான புதுச்சேரி, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

மரக்காணம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் உப்பு அனைத்தும் உணவில் சேர்ப்பதற்காக மட்டுமே பயன் படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. உப்பளத் தொழிலை நம்பி மரக்காணம் பகுதியில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் உள்ளனர். இங்கே ஆண்டு தோறும் ஜனவரி மாதம் தொடங்கும் உப்பு உற்பத்தியானது அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் வரையில் நடைபெறும். ஆனால் கடந்த 2 மாதத்துக்கு முன் பெய்த மழை மற்றும் பருவ நிலை மாற்றத்தினால் கடல் நீரானது கால்வாய் வழியாக புகுந்ததில் உப்பளங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி விட்டன. இதனால் உப்பு உற்பத்தியை தொடங்குவதற்கு காலதாமதம் ஏற்பட்டது.

மரக்காணம் பகுதியில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு

இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக உப்பு உற்பத்தி செய்வதற்கான முதல் கட்டப் பணிகளான பாத்திக்கள் அமைத்தல், கால்வாய்கள் அமைத்தல் மற்றும் உப்பு பாத்திக்களை பதப்படுத்துதல் ஆகிய பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய பணிகள் அனைத்தும் முடிவடைந்து, உப்பு உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு வழக்கத்திற்கு மாறாக, ஏமார்ச் மாதத்திலேயே கோடை வெயிலில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

மே மாதத்தில் இதைவிட இன்னும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்திருப்பதால், உப்பளங்களில் உப்பு தயாரிப்பும் அமோகமாக நடைபெற்று வருகிறது. 100 கிலோ கொண்ட உப்பு மூட்டையின் விலை ரூ.300 முதல் ரூ.500 வரையில் விற்பனையாகிறது. இதனால், உப்பு உற்பத்தி தொழிலாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Local News, Villupuram