முகப்பு /விழுப்புரம் /

காதிகிராப்ட் மூலம் பனை பொருட்கள் விற்பனை.. விழுப்புரத்தில் கலெக்டர் தொடங்கி வைத்தார்..

காதிகிராப்ட் மூலம் பனை பொருட்கள் விற்பனை.. விழுப்புரத்தில் கலெக்டர் தொடங்கி வைத்தார்..

X
காதிகிராப்ட்

காதிகிராப்ட் மூலம் பனை பொருட்கள் விற்பனை

Sale of Palm Products By Khadicraft : விழுப்புரம் மாவட்டத்தில் காதிகிராப்ட் நிறுவனம் மூலம் பனை பொருட்கள் விற்பனையகத்தை ஆட்சியர் பழனி தொடங்கி வைத்தார். 

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டத்தில் காதிகிராப்ட்டால் ஆன பொருட்கள் விற்பனையகத்தை கலெக்டர் பழனி தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பனை தொழிலாளர்களின் நலனை காக்கும் விதமாக 10 மாவட்டங்களில் முதல் கட்டமாக காதி கிராப்ட் நிறுவனம் மூலம் பனை கைவினைபொருட்கள், பனைவெல்லம், பனையால் ஆன திண்பண்டங்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார். அதன்பேரில் நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பனை பொருட்கள் விற்பனையகம் காதிகிராப்ட் நிறுவனம் மூலம் தொடங்கப்பட்டுள்ளன.

அந்த வரிசையில், 3வது மாவட்டமாக விழுப்புரம் மாவட்டத்தில், ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் காதிகிராப்ட் நிறுவனம் மூலம் பனை தொழிலாளர்களை ஊக்கும் விதமாக பனையாலான கைவினைப்பொருட்கள்பனை வெள்ளம், பனை பொருட்களால் செய்யப்பட்ட திண்பண்ட விற்பனையகத்தை ஆட்சியர் பழனி தொடங்கி வைத்தார்.

காதிகிராப்ட் மூலம் பனை பொருட்கள் விற்பனை

சட்டமன்றத்தில் முதலமைச்சர் 10 மாவட்டங்களில் பனை பொருட்கள் விற்பனையை தொடங்க வேண்டுமென உத்தரவிட்டதன்பேரில் 3வது மாவட்டமாக விழுப்புரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. பனை தொழிலாளர்களின் நலனை காக்கும் விதமாகவும், பனை தொழிலை ஊக்குவிக்கும் நோக்கிலும், பனை கைவினைபொருட்கள், பனைவெல்லம், பனையால் ஆன தின்பண்டங்கள் விற்பனையை தொடங்கி வைத்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதில் பனங்கற்கண்டு, பனைவெல்லம் , கடலைமிட்டாய், பொறி உருண்டை, பனைவெல்லம் சுக்கு காபி, மூலிகை சோப்பு, வத்தி, தேன், பனை தூரிகை வகைகள், போன்றவைகள் விற்பனையகத்தில் இடம்பெற்றுள்ளன.

First published:

Tags: Local News, Villupuram