Home /viluppuram /

75-வது சுதந்திர தினம்: விழுப்புரம் அஞ்சலகங்களில் தேசியக்கொடி விற்பனை

75-வது சுதந்திர தினம்: விழுப்புரம் அஞ்சலகங்களில் தேசியக்கொடி விற்பனை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட அஞ்சல் நிலையங்களில் தேசியக்கொடியை பொது மக்கள் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    விழுப்புரம் மாவட்ட அஞ்சல் நிலையங்களில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடியை பொது மக்கள் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆகஸ்ட் 1-ம் தேதியில் இருந்து நாட்டில் உள்ள 1,60,000
    அஞ்சல் நிலையங்களிலும் தேசியக் கொடியை மக்கள் நேரில் சென்று பணம் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.

    அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அஞ்சல் நிலையங்களிலும் தேசியக்கொடி விற்பனை தொடங்கியுள்ளது.

    விழுப்புரம் தலைமை அஞ்சல் நிலையத்தில் பொதுமக்களுக்கு தேசியக்கொடி விற்பனையை உதவி அஞ்சல் கண்காணிப்பாளா் பிரவீன் செவ்வாய்க்கிழமை முறைப்படி தொடக்கி வைத்தாா்.

    இந்த மாவட்டத்தில் இருக்கும் அனைத்துத் அஞ்சல் அலுவலகங்கள், துணை அஞ்சல் அலுவலகங்களிலும் தேசியக்கொடியை ரூ.25 செலுத்தி பொதுமக்கள் பெற்றுக் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Viluppuram S22p13

    அடுத்த செய்தி