முகப்பு /விழுப்புரம் /

வாட்டி வதைக்கும் கோடை வெயில்.. விழுப்புரத்தில் பழங்களின் விற்பனை படுஜோர்! 

வாட்டி வதைக்கும் கோடை வெயில்.. விழுப்புரத்தில் பழங்களின் விற்பனை படுஜோர்! 

X
மாதிரி

மாதிரி படம்

Fruits Shops In Villuppuram : விழுப்புரம் எம்.ஜி.ரோடு, நேருஜி சாலைகளில் உள்ள பல சந்தைகளில் பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது.

  • Last Updated :
  • Viluppuram, India

வெயில் காலம் ஆரம்பித்துவிட்டதால் விழுப்புரம் சந்தைகளில் பழங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த கோடை காலத்தில் உஷ்ணத்தில் இருந்து காத்துக் கொள்வதற்கு அதிக அளவில் குளிர்பானங்கள் பழங்களை பொதுமக்கள் தேடி வாங்கி செல்கின்றனர்.

அந்த வகையில் விழுப்புரம் எம் ஜி ரோடு,நேருஜி சாலைகளில் உள்ள பல சந்தைகளில் பழங்களின் வரத்தும் அதிகரித்துள்ளது, விலையும் கூடியிருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கோடைகாலம் வருவதற்கு முன்னரே பழங்களின் விற்பனையும் விலையும் அதிகரித்து உள்ளது. மே மாதத்தில், பழங்கின் விலை மேலும், அதிகரித்து விடும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் பழங்களை அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்.

விழுப்புரத்தில், ஒரு கிலோ ஆப்பிள் 200 ரூபாய்க்கும், மாதுளை ரூ. 180 க்கும், சாத்துக்குடி 80 ரூபாய்க்கும், ஆரஞ்சு 140 ரூபாய்க்கும், மாம்பழம் 80 ரூபாய், தர்பூசணி 30 ரூபாய்க்கும், கிர்னி பழம் 30 ரூபாய்க்கும், அண்ணாச்சி பழம் கிலோ 80 ரூபாய்க்கும், திராட்சை கிலோ 80 ரூபாய்க்கும், செவ்வாழை 60 ரூபாய்க்கும் விற்பனை ஆவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

விழுப்புரத்தில் பழங்களின் விற்பனை படுஜோர்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    குறிப்பாக, பொதுமக்கள் திராட்சை, கிர்ணி பழம், தர்பூசணி, மாம்பழம், சாத்துக்குடி போன்ற பழங்களை விரும்பி வாங்கி செல்கின்றனர் எனவும் வியாபாரம் சிறந்த முறையில் நடக்கிறது எனவும் வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

    First published:

    Tags: Local News, Villupuram