ஹோம் /விழுப்புரம் /

1000 ரூபாய், பொங்கல் பரிசு தொகுப்பு - விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

1000 ரூபாய், பொங்கல் பரிசு தொகுப்பு - விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

பொங்கல் பரிசு தொகுப்பு

பொங்கல் பரிசு தொகுப்பு

Villupuram District | 1000 ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் மற்றும் பிற விவரங்கள் குறித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

பொங்கல் பரிசு தொகுப்பாக, குடும்பங்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, மற்றும் ஒரு முழுக் கரும்புடன் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்குவது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், முதலமைச்சர் இந்த ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டை தாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, மற்றும் ஒரு முழுக் கரும்புடன் ரூ. 1000 ரொக்கப்பணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் நடைமுறையில் உள்ள 6,14,906 அரிசி பெறும் குடும்ப அட்டை தாரர்களுக்கும் மற்றும் 434 மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது.

பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் பெற ஏதுவாக குடும்ப அடடை தாரர்களுக்கு வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு டோக்கன்களை 3ஆம் தேதி (இன்று) முதல் 8ஆம் தேதி வரை விடுமுறை தினமான 6 ஆம் தேி நீங்கலாக டோக்கன் வழங்கப்படும்.

பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் விநியோகப் பணியினை 9ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டு பொங்கல் திருநாளுக்கு முன்னரே 13ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் விநியோக பணி முழுமையாக முடிக்கப்படும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ரேசன் கடை பணியாளர்கள் வாயிலாக வீடு வீடாகச்சென்று பொதுமக்கள் எந்த நாட்களில் எந்த நேரத்தில் கடைக்குச் சென்று பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்ற விவரத்தை தெரிவித்து டோக்கன் வழங்கப்படும்.

Must Read : அடேங்கப்பா... ஆச்சரியப்படுத்தும் செஞ்சி கோட்டைக்கு இத்தனை சிறப்புகளா - சுற்றுலா பயணிகளே மிஸ் பண்ணாதீங்க

குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படும் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் விநியோகத்தில் ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் விழுப்புரம் மாவட்ட கூட்டு றவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறைதொலைபேசி எண் 04146- 229854 மற்றும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் தொலை பேசி எண் 04146-229884 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Pongal 2023, Pongal Gift, Villupuram