விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்ட வளாக பின்புற கேட் வழியாக செல்லும் திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் இ.எஸ்., கார்டன் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகளுக்கு செல்லும் வழியாக இந்த சாலை உள்ளது. மேலும் இந்த குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளை கடந்த மாதம் பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ள படுவதற்காக சாலைகள் அனைத்தும் தோண்டப்பட்டது.
இதனால், தார் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இது தொடர்பாக நியூஸ் 18 உள்ளூர் இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, குண்டும், குழியுமாக இருந்த சாலைகள் சிமெண்ட் கலவைகள் மூலம் சில தினங்களுக்கு முன் சீரமைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் பின்புறம் கேட்டில் இருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு, இ.எஸ்., கார்டன் பகுதி வழியாக செல்லும் சாலையை தார் சாலையாக மாற்ற ஆட்சியர் நடவடிக்கை எடுத்தார். இங்குள்ள 320 மீட்டர் நீளமுள்ள சாலையை சீரமைக்க மாவட்ட ஆட்சியரின் பொது நிதியின் கீழ் ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான டெண்டர் விடப்பட்டு, கடந்த இரண்டு நாட்களாக தார் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டது. மேலும், பெருந்திட்ட வளாக பின்புற கேட்டில் இருந்து திருக்கோவிலுார் நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்த சாலையையும் உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி குடியிருப்பு வாசிகள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.