ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரத்தில் குடியிருப்பு பகுதியை சூழ்ந்த மழைநீர்... பொதுமக்கள் கடும் அவதி!

விழுப்புரத்தில் குடியிருப்பு பகுதியை சூழ்ந்த மழைநீர்... பொதுமக்கள் கடும் அவதி!

விழுப்புரம்

விழுப்புரம்

Viluppuram District News | விழுப்புரத்திலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் டெல்டா மாவட்டங்களில் இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

விழுப்புரத்திலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. விஜிபி நகர் - கிழக்கு புகாரி திருநகர், பாண்டியன் நகர், பொன் அண்ணாமலை நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

மழைநீருடன் கழிவு நீரும் கலந்து ஆங்காங்கே குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. வெளியே சென்று வர இந்த கழிவு நீர் தேங்கியுள்ள சாலையை தான் கடக்க வேண்டி உள்ளது. இதனால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க : விழுப்புரத்தில் இடிந்து விழுந்த காவல்நிலைய மேற்கூரை - தப்பிய காவலர்கள்

நகராட்சி நிர்வாகம் உடனடியாக தேங்கியுள்ள கழிவுநீர் கலந்த மழை நீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். மழை நீரில் பாம்புகள் போன்ற விஷ ஜந்துக்கள் இருப்பதாகவும் தேங்கியுள்ள மழை நீரில் கால் வைக்கவே அச்சமாக இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

பில்லூர் பகுதியில் 300 ஆண்டு பழமை வாய்ந்த ஆல மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் மோகன் மரத்தை வேட்டி அப்புறப்படுத்த உத்தரவிட்டார். இரண்டு மணி நேரத்திற்கு பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthi K
First published:

Tags: Local News, Vizhupuram