ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரத்தில் குடியிருப்பு பகுதியை சூழ்ந்த மழை நீர்..  பொதுமக்கள் அவதி

விழுப்புரத்தில் குடியிருப்பு பகுதியை சூழ்ந்த மழை நீர்..  பொதுமக்கள் அவதி

X
Residents

Residents in Villupuram are suffering due to rain water surrounding area

villupuram News: விழுப்புரத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரத்தில் பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. 

தமிழகத்தின் 26 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவில் முதல் மழை பெய்த நிலையில் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.இந்நிலையில்,விழுப்புரம் முத்தாம்பாளையம் முருகன் கோவில் எதிரில்,திருமலை நகர் மற்றும் வாஞ்சிநாதன் நகர் பகுதியில்,சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

கனமழை காரணமாக திருமலை நகர் பகுதியில்,மழைநீர் வீடுகளை சுற்றி தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் மழை நீரால் ,கடும் துர்நாற்றம், கொசுக்கள் உற்பத்தி மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.தேங்கி நிற்கும் தண்ணீரில் விஷ ஜந்துக்களும் உள்ளதால் பொதுமக்கள்,அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில்,பலர் வீடுகளை காலி செய்து விட்டு சென்றுவிட்டனர்.

மேலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும்,கொசுக்கள் அதிகமாகி டெங்கு மலேரியா போன்ற நோய்கள் பரவ காரணமாகவும் இருப்பதால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி ஊராட்சி தலைவரிடம் பலமுறை முறையிட்டும் மக்களின் புகாரை அவர் பொருட்படுத்தவே இல்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்தபடியாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Tamil News, Villupuram