விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் கணிசமாக அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள், விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், போன்ற நகரப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர். இந்த மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
மாணவர்கள் தங்கள் கிராமங்களில் இருந்து தினந்தோறும் அரசு பேருந்துகளில் மூலம் நகரப்பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர். இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுகின்றது. மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களுக்கு ஒன்று அல்லது இரண்டு அரசு பேருந்துகள் தான் இயக்கப்படுகின்றது.
இதனால், பள்ளிக்கு செல்லும்போதும், பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும்போதும் மாணவர்கள் அரசு பேருந்துகளில் முண்டியடித்து ஏறி, படியில் தொங்கி செல்லும் நிலை நீடித்து வருகின்றது. கடந்த கல்வியாண்டில், விழுப்புரத்தில் அரசு பேருந்தில் ஆய்வு செய்த ஆட்சியர் மோகன், அதிகளவு மாணர்கள் வரும் பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆனாலும், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் இதை கண்டுகொள்ளவில்லை. இதனால், மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. ஆட்சியரின் உத்தரவை காற்றில் பறக்க விட்டு வருகின்றனர் அதிகாரிகள்.

ஃபுட் போர்டில் பயணிக்கும் மாணவர்கள்
பில்லூர், கப்பூர்,பாணம்பட்டு, கஞ்சனூர் போன்ற பகுதியில் இருந்து வரும் பேருந்துகள் அதிக அளவில் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. இந்த பேருந்துகளில் மாணவிகள் மற்றும் மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்யும் அவலநிலை தொடர்ந்து வாடிக்கையாக வருகிறது. ஒரு சில தினங்களுக்கு முன்பு ஒரு மாணவன் பேருந்திலிருந்து கீழே விழுந்த சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதுபோன்ற செயல்கள் மறுபடியும் நடக்காமல் தடுப்பதற்கு அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் , பள்ளி நேரங்களில் பேருந்துகளின் பற்றாக்குறையினால் மாணவர்களாகிய நாங்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம், மாலை நேரத்தில் கூட்டநெரிசலில் சிக்கி கொண்டு வீட்டுக்கு செல்வதற்கு மிக சிரமமாக இருக்கிறது எனவே பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கவேண்டும் என பள்ளி மாணவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.