முகப்பு /விழுப்புரம் /

விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் சமரச வார விழா பேரணி..

விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் சமரச வார விழா பேரணி..

X
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் சமரச வார விழா பேரணி

Villupuram News | விழுப்புரம் மாவட்டத்தில் நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் மத்தியில் சமரசத்தை உண்டாக்கும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இந்த பேரணியில் விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நிலை நீதிபதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Viluppuram, India

சென்னை உயர்நீதிமன்றம் வழிகாட்டுதலின்படி விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான பூர்ணிமா தலைமையில், மாபெரும் சமரச வார விழா பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நிலை நீதிபதிகள் கலந்துகொண்டனர்.

இப்பேரணியானது மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் துவங்கி புதிய பேருந்து நிலையம் வழியாகச் சென்று புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முடிந்தது.பேரணியில் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு சமரசம் பற்றிய துண்டு பிரசுரங்களை நீதிபதிகள் அனைவரும் வழங்கினர். பேரணியின் நிறைவாக முதன்மை மாவட்ட நீதிபதி பூர்ணிமா சிறப்புரை வழங்கினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்தப் பேரணியில் விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற பணியாளர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் என சுமார் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    First published:

    Tags: Local News, Villupuram