Home /viluppuram /

நர்சரி தோட்டத் தொழிலில் நல்ல லாபம் சம்பாதிக்கும் முதியவர் ராமன்

நர்சரி தோட்டத் தொழிலில் நல்ல லாபம் சம்பாதிக்கும் முதியவர் ராமன்

Raman

Raman is an old man who makes good profits in the nursery garden business

விழுப்புரத்தில் வெற்றிகரமாக 35 வருடங்கள் இயங்கிக்கொண்டிருக்கிறது ரம்யா நர்சரி கார்டன். இந்த கார்டன் உரிமையாளரான ராமன் முடிந்த அளவிற்கு இருக்கும் இடம் இல்லாமல் அனைத்து இடங்களும் பசுமையாக மாற்ற வேண்டும் என கருதி இந்த நர்சரி கார்டன் ஆரம்பித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    கிராமப்புற பகுதிகள் இயற்கையாகவே பசுமையாக காட்சித்தரும்.ஆனால், நகர்ப்புறங்களில் பசுமை பார்ப்பது கொஞ்சம் அபுர்வம் தான். ஒருசிலர் வீட்டில் பசுமையை ஏற்படுத்த ஜன்னல், முகப்பு, முற்றம், உள்ளே, வெளியே, வரவேற்பறை, கார் நிறுத்துமிடம், சுற்றுச்சுவர் என பல இடங்களில் பூச்செடிகள், பசுமை தரும் செடிகள் இவற்றை வைப்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

    உயர்தட்டு மக்கள், நடுத்தர வருவாய்ப் பிரிவினர், நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் என அனைத்து தரப்பிலும் இவற்றை வைப்பதற்கான ஆர்வம் அதிகரித்து வருகிறது.மக்களிடையே மாடி தோட்டம், பசுமை தோட்டம் அதிகளவில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.நர்சரி தோட்டம் வளர்ப்புத் நல்ல லாபம் தரும் தொழிலாக வளர்ந்து வருகிறது.

    பல பகுதிகளில் நர்சரி கார்டன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அதுபோல விழுப்புரத்தில் வெற்றிகரமாக 35 வருடங்கள் இயங்கிக்கொண்டிருக்கிறது ரம்யா நர்சரி கார்டன். இந்த கார்டன் உரிமையாளரான ராமன்( 64) முடிந்த அளவிற்கு இருக்கும் இடம் இல்லாமல் அனைத்து இடங்களும் பசுமையாக மாற்ற வேண்டும் என கருதி இந்த நர்சரி கார்டன் ஆரம்பித்துள்ளார்.

    இந்த நர்சரி கார்டனில் பூச்செடிகள் முதல் மரங்கள் வரை அனைத்து ரக செடிகளும் உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரகங்கள் இந்த ரம்யா நர்சரி கார்டனில் உள்ளது. நாட்டு ரகங்களும் ஹைபிரிட் ரகங்களும் இவர்களிடம் உள்ளது.

    ரோஜா செடிகளில் உள்ள அனைத்து வகைகளும்,சந்தன மரங்கள், கமலா ஆரஞ்சு மரங்கள், சீதாப்பழம், காக்டஸ், இதுமட்டுமில்லாமல் இங்கு வாட்டர் ஆப்பிள் ரகச் செடிகளை அதிகளவில் விற்பனையாகிறது. இந்த ரக செடிகள் வாங்குவதற்குப் பொதுமக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுகிறார்கள் உரிமையாளர் கூறுகிறார். விலையும் 25 ரூபாய் முதல் செடிகள் ஏற்றவாறு விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் இந்த கார்டனில் உற்பத்தி செய்யப்படும் செடிகள் அனைத்தும் ஆந்திரா கர்நாடகா மற்றும் பல மாவட்டங்கள் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. செடிகள் அனைத்தும் குழந்தைகளைப் பார்ப்பது போல், செடிகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறோம். விழுப்புரத்தில் ரம்யா நர்சரி கார்டன் என்றாலே ஒரு தனி சிறப்பும், பெயரும் பெற்றுள்ளது. ஆகையினால் எங்களுக்கு எத்தனை நர்சரி கார்டன் வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் ரம்யா நர்சரி கார்டன் உரிமையாளர் ராமன்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Karthick S
    First published:

    Tags: Viluppuram S22p13

    அடுத்த செய்தி