முகப்பு /விழுப்புரம் /

நாவூற வைக்கும் சுவை.. விழுப்புரத்தில் காடை முட்டை ஸ்டிக் விற்பனை படுஜோர்..

நாவூற வைக்கும் சுவை.. விழுப்புரத்தில் காடை முட்டை ஸ்டிக் விற்பனை படுஜோர்..

X
காடை

காடை முட்டை

Quail egg stick sale in Villupuram : விழுப்புரத்தில் காடை முட்டை விற்பனையும், காடை முட்டை ஸ்டிக் மசாலா உணவும் சிறந்த முறையில் விற்பனையாகி வருவதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள் கடையின் உரிமையாளர்கள்.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரத்தில் காடை முட்டை விற்பனையும், காடை முட்டை ஸ்டிக் மசாலா உணவும் சிறந்த முறையில் விற்பனையாகி வருவதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள் கடையின் உரிமையாளர்கள். சத்து நிறைந்த காடையை சிறுவர்கள் முதல் பெரியவர்களை அனைவரும் சாப்பிட்டு வருகின்றனர்.

பல மாவட்டங்களில் கோழி முட்டையைப் போலவே, காடை முட்டை விற்பனையும், காடை முட்டை உற்பத்தியும் நடைபெற்று வருகிறது.  காடை முட்டையை உண்பதால் நம் உடலில் ஏற்படக்கூடிய அலர்ஜி, ஒவ்வாமை போன்ற நோய்கள் கட்டுப்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. காடை முட்டையை உண்பதால் நம் மூளையின் செயல்பாட்டை தூண்டி நமக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்வதாகவும் கூறுகின்றனர். காடை முட்டையை உண்பதால் நமது நரம்பு மண்டலம் பலமடைவதாகவும் சொல்கின்றனர்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் ரங்கநாதன் தெருவில் காடை முட்டை அதிக அளவில் விற்பனை நடைபெற்று வருகிறது. இங்கே கடை திறந்த 5 மாதத்திலேயே கடைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கடையின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

விழுப்புரத்தில் காடை முட்டை ஸ்டிக் விற்பனை படுஜோர்

இதையும் படிங்க : தைக்கால் பிரம்பு பொருள் உற்பத்தி தொழிலுக்கு அரசு உதவ வேண்டும்- புவிசார் குறியீடு பெற்றநிலையில் வியாபாரிகள் கோரிக்கை

பொதுமக்களும் காடை முட்டையை விரும்பி வாங்கி செல்கின்றனர். எங்களுக்கும் வியாபாரம் சிறந்த முறையில் நடக்கிறது என கடை உரிமையாளர்கள் கூறினார்கள். இங்குள்ள கடையில், ராதா-குமார் தம்பதியினர் கடை நடத்தி வருகின்றனர். அவர்ககளின் பிள்ளைகள் பெற்றோருக்கு துணையாக இந்த காடை முட்டை விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் தங்கள் பள்ளிப் படிப்பு நேரம் முடிந்தவுடன் இந்த காடை முட்டை வியாபாரம் செய்கின்றனர். இங்கே காடை முட்டை ஸ்டிக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது குழிப்பணியார சட்டியில் காடை முட்டைகளை, ஸ்டிக்கை வைத்து உடைத்து ஊத்தி செய்யப்படும் உணவாகும்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், காடை முட்டை விற்பனை கடையை நாங்கள் திறந்து ஐந்து மாதங்கள் ஆகிறது. இதற்கான முட்டைகள் அனைத்தும் சிதம்பரம் பகுதியில் இருந்து எடுத்து வருகிறோம். மாலை 6 மணி முதல் கடை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கே கடை திறந்த கொஞ்ச நாட்களிலேயே கடைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

30 முட்டைகள் அடங்கிய தொகுப்பு 170 ரூபாய்க்கும், 12 முட்டைகள் அடங்கியது 70 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறோம். முட்டை விற்பனை மட்டுமல்லாமல் ஐந்து முட்டைகளை உடைத்து செய்யப்படும் முட்டை ஸ்டிக் மசாலா உணவும் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இங்கே, விழுப்புரம் மக்கள் அதிக அளவில் வருகை புரிகிறார்கள், வியாபாரமும் விற்பனையும் நல்ல முறையில் செல்கிறது. அதுமட்டுமல்லாமல் விழுப்புரத்தில் முதல் முறையாக காடை முட்டைகள் இங்கதான் கிடைப்பதாகவும் சொல்கிறார்கள் என்று அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    First published:

    Tags: Food, Lifestyle, Local News, Villupuram