ஹோம் /விழுப்புரம் /

புரட்டாசி மாசம்.. எல்லாம் ஒரே வெஜ்ஜா இருக்காங்க... விழுப்புரத்தில்  இறைச்சி பிசினஸை ஓரம் கட்டிய காய்கறி வியாபாரம்.. 

புரட்டாசி மாசம்.. எல்லாம் ஒரே வெஜ்ஜா இருக்காங்க... விழுப்புரத்தில்  இறைச்சி பிசினஸை ஓரம் கட்டிய காய்கறி வியாபாரம்.. 

விழுப்புரம்

விழுப்புரம் - காய்கறி வியாபாரம்

Villupuram District Vegetable Market Price | விழுப்புரம் பாகர்ஷா வீதியில் உள்ள நடைபாதை காய்கறி கடைகளில் காய்கறிகளை வாங்குவதற்கு மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். காலை முதல் மாலை வரை காய்கறி வாங்குவதற்கு பொதுமக்கள் வருகை அதிகரித்திருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

விழுப்புரம் பாகர்ஷா வீதியில் உள்ள நடைபாதை சந்தையின் காய்கறி கடைகளில் புரட்டாசி மாதம் என்பதால் காய்கறி வாங்குவதற்கு பொதுமக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெருமாளுக்கு மிகவும் உகந்தது புரட்டாசி மாதம் . இந்த மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவில்களில் விஷேச வழிபாடு நடக்கும். மேலும் நவராத்திரி விழா கொண்டாட்டங்களும் வரிசைகட்டி நிற்பதால் இந்த மாதத்தில் பலரும் அசைவம் சமைப்பதை தவிர்த்துவிட்டு சைவ உணவுகளை மட்டுமே தங்கள் வீடுகளில் சமைப்பார்கள்.

இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கறிக்கடைகள் தற்போது காற்று வாங்கிக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் காய்கறிகளின் தேவை கடுமையாக அதிகரித்துள்ளது.

அந்த வகையில் விழுப்புரம் பாகர்ஷா வீதியில் உள்ள நடைபாதை காய்கறி கடைகளில் காய்கறிகளை வாங்குவதற்கு மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். காலை முதல் மாலை வரை காய்கறி வாங்குவதற்கு பொதுமக்கள் வருகை அதிகரித்திருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க:  திருச்சியில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான சுற்றுலா தலங்கள்...! இங்கு இவ்வளவு சிறப்புகளா...!

காய்கறி விலை நிலவரம் தொடர்பாக பாகர்ஷா வீதியில் காய்கறி கடை நடத்திவரும் மணிகண்டனிடம் பேசினோம்..

புரட்டாசி மாதத்தில் பெரும்பாலான மக்கள் இறைச்சி தவிர்த்து காய்கறி வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். புரட்டாசி மாதத்தில் காய்கறி விலை ஏறும் என நாங்கள் எண்ணியிருந்தோம். ஆனால் காய்கறியின் தேவை அதிகமாக இருப்பதால், விலையும் அதற்கேற்றார் போல் உள்ளது.

ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய்க்கும்,

பீன்ஸ்- 60 ரூ ,

கேரட் -60ரூ,

உருளை - 35-40 ரூ,

வெண்டை - 20 ரூ,

வெங்காயம்- 25/30 ரூ

சௌசௌ -:20 ரூ

கோஸ் - 25/30 ரூ

கருணைக்கிழங்கு - 40/50 ரூ

பச்சைமிளகாய் - 35/40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

பொதுமக்கள் அதிகளவில் கேரட், வெங்காயம், தக்காளி, முருங்கைக்காய், பீன்ஸ், கத்திரிக்காய் போன்ற காய்கறி வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

காய்கறிகளின் விலை அதிகரிக்க வில்லை என்றாலும் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. எனவே வியாபாரம் எங்களுக்கு நல்ல முறையில் நடக்கிறது என வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram