முகப்பு /விழுப்புரம் /

குறுக்கே கம்பி வேலி.. இரவு முழுவதும் காத்திருந்த உடல்.. மாயனத்துக்கு வழிகேட்டு திருவெண்ணைநல்லூரில் போராட்டம்

குறுக்கே கம்பி வேலி.. இரவு முழுவதும் காத்திருந்த உடல்.. மாயனத்துக்கு வழிகேட்டு திருவெண்ணைநல்லூரில் போராட்டம்

X
Public

Public protests demanding road access to the cemetery

Thiruvennainallur Protest | போராட்டம் குறித்து தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்,.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thiruvennainallur, India

திருவெண்ணைநல்லூர் அருகே ஆனத்தூர் கிராமத்தில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்கு பாதை வழங்க மறுத்ததை கண்டித்து கருப்பு கொடியுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஆனத்தூர் தொட்டி மேடு கிராமத்தில்  ஆறுமுகம்( 85) என்ற முதியவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். சுமார் 60 ஆண்டு காலமாக இறந்தவர்களின் உடலை தனியார் பட்டாதாரர்களின் நிலத்தின் வழியே 1 கிலோ மீட்டர் தூரம் உடலை எடுத்து சென்று அடக்கம் செய்வது வழக்கமாக ஒன்றாக இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நிலத்தில் வேர்க்கடலை மற்றும் சவுக்கை உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்து பாதுகாப்புக்காக கம்பி வேலி போடப்பட்டுள்ளதால் அந்த வழியாக உடலை எடுத்துச் செல்ல முடியாமல்  இரவு முழுவதும் உடலை அங்கேயே போட்டுவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதற்கு உடனே தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்கள் கருப்பு கொடியுடன் கடலூர்- திருக்கோவிலூர் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்,.

மயானத்திற்கு பாதை அமைத்து தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போரட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

First published:

Tags: Local News, Villupuram