தமிழ்நாட்டில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பல நூலகங்கள் சொந்த கட்டிடம் இல்லாமல்,வாடகை கட்டிடத்திலும், சில நூலகங்கள் சொந்த கட்டிடத்திலும் இயங்கி வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் சொந்த கட்டிடத்தில் இயங்கி வரும் நூலகங்களில் சில சேதமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் இயங்கி வருகிறது.
விழுப்புரம் அருகே வளவனூர் சத்திரம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலகம் அருகில் உள்ள கிளை நூலகமும் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ள நூலக கட்டிடத்தில் ஒன்று தான். இந்த நூலக கட்டிடம் கடந்த 1995-ம் ஆண்டில் திறக்கப்பட்டது. இங்கு நூலக அலுவலர்கள் 2 பேர் பணியாற்றி வருகின்றனர். இங்கு நூற்றுக்கணக்கான வாசகர்கள் தினமும் வந்து இங்கு உள்ள நூல்கள் மற்றும் செய்தித்தாள்களை படித்து செல்வது வழக்கம்.
இந்நூலகத்தில் வரலாறு, இலக்கியம், நாவல்கள், தலைவர்களின் வரலாறு, வாழ்க்கையின் சிகரம் தொட்ட சாதனையாளர்களின் வரலாறு கட்டுரை, ஆன்மீகம், சமையல் குறிப்புகள், போட்டி தேர்வு புத்தகங்கள், மருத்துவம் அடங்கிய புத்தகம்,உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த நூல்கள் என 22,000 க்கும் மேற்பட்ட புத்தங்கள் உள்ளன. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 60க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த நூலகத்தின் மூலம் பயனடைந்து வருகிறார்கள்.
இந்த நூலக கட்டிடத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவ்வப்போது பராமரிப்பு பணி செய்யாமல் அப்படியே விட்டுவிட்டனர். இதன் விளைவு தற்போது நூலக கட்டிடம் மிகவும் சேதமடைந்த நிலையில்,கட்டிடத்தின் மேற்கூரையின் சிமெண்ட் காரைகள் அவ்வப்போது பெயர்ந்து விழுகிறது. கட்டிட சுவர்களிலும் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டும், கதவுகள் பெயர்ந்தும் காணப்படுகிறது. இந்த நூலகத்திற்கு வரும் வாசகர்கள் பெரும் அச்சத்துடன் வந்து நூல்களை படிக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், மழைக்காலங்களில், நூலக கட்டிடத்திற்குள் தண்ணீர் கசிவு ஏற்பட்டு ஒழுகுவதால் நூலகத்தில் இருக்கும் புத்தகங்கள் மழைநீரில் நனைந்து வீணாகும் நிகழ்வுகளும் நடந்து வருகிறது.
இதையும் படிங்க : விழுப்புரம் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு.. அரசு போட்டி தேர்விற்கான இலவச பயிற்சி - கலந்துக்கொண்டு பயன்பெறுங்கள்
ஆகையால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், படிக்கும் வாசிப்பாளர்கள், புதிய கட்டிடம் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அல்லது இந்த நூலக கட்டிடத்தை மறுசீரமைப்பு செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tamil News, Villupuram