முகப்பு /விழுப்புரம் /

விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.. ஆர்வத்துடன் கலந்துகொண்ட இளைஞர்கள்..

விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.. ஆர்வத்துடன் கலந்துகொண்ட இளைஞர்கள்..

X
விழுப்புரத்தில்

விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

Employment Camp in Villupuram : விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக தனியார் துறையில் பணிவாய்ப்பினை பெற விரும்பும் படித்த இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமையன்று சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமும், ஆண்டிற்கு ஒரு முறை பெரிய அளவிலான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்றது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட வேலை அளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட காலிப்பணி இடங்களை நிரப்ப உள்ளனர்.

இதையும் படிங்க : "வந்தாச்சு ரம்ஜான்" செஞ்சி சந்தையில் களைகட்டிய ஆடுகள் விற்பனை! எத்தனை கோடி தெரியுமா?

இதில், விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை ITI Diploma, BE/ B.Tech, Nursing, Pharmacy போன்ற கல்வித் தகுதியுடைய வேலைத் தேடும் இளைஞர்கள் இம்முகாமில் கலந்துகொண்டனர். இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இதில், விழுப்புரம் மாவட்டம் மட்டும் அல்லாது, மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த முகாமில் கலந்து கொண்ட இளைஞர்கள் கூறுகையில், இது போன்ற வேலைவாய்ப்பு முகாம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று தெரிவித்தனர்.

First published:

Tags: Jobs, Local News, Villupuram