முகப்பு /விழுப்புரம் /

விழுப்புரத்தில் முதன் முறையாக நடைபெறும் புத்தகத் திருவிழா.. ஆயத்தப் பணிகள் தீவிரம்!

விழுப்புரத்தில் முதன் முறையாக நடைபெறும் புத்தகத் திருவிழா.. ஆயத்தப் பணிகள் தீவிரம்!

X
புத்தக

புத்தக திருவிழா முன்னேற்பாடுகள்

Villupuram News | விழுப்புரம் மாவட்டத்தில் முதன் முறையாக நடைபெறும் புத்தகத் திருவிழாவிற்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டத்தில் முதன் முறையாக நடைபெறும் புத்தகத் திருவிழாவிற்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில், முதன் முதலாக நடைபெறவுள்ள மாபெரும் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, விழுப்புரம் நகராட்சி திடலில் அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது

தமிழ்நாடு முதலமைச்சர்பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை தூண்டும் விதமாகவும், அறிவார்ந்த சமுதாயம் உருவாக வேண்டும் என்பதற்காக மாவட்டங்களில் புத்தகத் திருவிழா நடத்த உத்தரவிட்டார்.

அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் முதல் புத்தகத் திருவிழா, விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் 25.03.2023 அன்று தொடங்கி 05.04.2023 வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது.

புத்தகத்திருவிழாவில் 100 அரங்குகள் அமைக்கப்படவுள்ளது. இவ்வரங்குகளில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் மற்றும் உள்ளூர் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, உள்ளூர் எழுத்தாளர்களுக்கான புத்தக அரங்கு ஒதுக்கப்பட்டு புத்தகங்கள் காட்சிப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புத்தகத் திருவிழாவிற்கு நாள்தோறும் பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் புத்தக அரங்குகள் பார்ப்பது மட்டுமல்லாமல், நாள்தோறும் காலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையில் பெருந்திரள் வாசிப்பும், மாணவர்களுக்கான கட்டுரை, கவிதை, உட்பட பல்வேறு போட்டிகளும், மதியத்திற்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் உள்ளூர் கலைஞர்களின் நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகளும், பின்னர் சிறப்பு அழைப்பாளர்கள் கொண்டு சொற்பொழிவு பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

இதுமட்டுமல்லாமல், பாரம்பரிய உணவு திருவிழாவும், மகளிர் சுய உதவிக்குழுவினர் கைவினைப் பொருட்கள் கண்காட்சி, குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்குகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் உயர் கல்வியினை தேர்ந்தெடுப்பதற்கான சிறப்பு கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

இப்புத்தகத்திருவிழாவினை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பார்வையிட்டு பயன்பெறும் வகையில், சிறப்புப் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் வருகை புரிந்து புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Book Fair, Local News, Villupuram