ஹோம் /விழுப்புரம் /

பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு மண்பானை வழங்கவேண்டும்... விழுப்புரம் மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை..

பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு மண்பானை வழங்கவேண்டும்... விழுப்புரம் மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை..

X
ஆர்ப்பாட்டத்தில்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மண்பாண்ட தொழிலாளர்கள்

Viluppuram District News : விழுப்புரம் மாவட்டம் பெருந்திட்ட வளாகம் எதிரே பானை உள்ளிட்ட மண்பாண்ட பொருட்கள் செய்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மண்பாண்ட கலைஞர்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகம் எதிரே பானை உள்ளிட்ட மண்பாண்ட பொருட்கள் செய்து மண்பாண்ட தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தை மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகம் எதிரில் மண்பாண்ட தொழிலாளர் சங்கம் சார்பில் 50-க்கும் மேற்பட்ட மண்பாண்ட கலைஞர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மண்பாண்ட கலைஞர்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் புதிய மண்பானையும் புதிய மண் அடுப்பும் வழங்க வேண்டும், மழைக்கால நிவாரணம் இலவச மின் விசை சக்கரம் வழங்க வேண்டும்.

இதையும் படிங்க : திருக்குறள் ஒப்புவித்தால் ரூ.10,000 பரிசு - விழுப்புரம் ஆட்சியரின் அட்டகாச அறிவிப்பு

கல்வி ஊக்கத்தொகை நலத்திட்ட உதவிகள், தொழில் கடன் கல்விக் கடன் வழங்க வேண்டும், களி மண் எடுப்பதற்கான அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக சாலையின் நடுவே விசை சக்கரத்தை வைத்து அதில் பானை செய்து வர்ணம் பூசியும், மண் அடுப்பில் விறகு வைத்தும், வித்தியாசமான முறையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர்.

First published:

Tags: Local News, Vizhupuram