ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரம்- புதுச்சேரி நெடுஞ்சாலை தடுப்புச் சுவரில் எமனாக நிற்கும் கம்பிகள் - அச்சத்தில் வாகன ஓட்டிகள்

விழுப்புரம்- புதுச்சேரி நெடுஞ்சாலை தடுப்புச் சுவரில் எமனாக நிற்கும் கம்பிகள் - அச்சத்தில் வாகன ஓட்டிகள்

விழுப்புரம்

விழுப்புரம்

Villupuram Pondicherry Road | விழுப்புரம் அருகே சாலைஅகரம் பெட்ரோல் நிலையம் அருகில் கடந்த ஓராண்டுக்கு முன்பு இரவு நேரத்தில்,லாரி ஒன்று சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதியதில் அந்த தடுப்புச்சுவர் உடைந்து சேதமடைந்ததோடு அதிலுள்ள இரும்புக்கம்பிகள் வெளியே தெரிந்தன.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

விழுப்புரம் புதுச்சேரி நெடுஞ்சாலையில் அபாய நிலையில் காணப்படும் தடுப்புச்சுவர். அந்த தடுப்புச்சுவரால் பெரும் விபரீதம் நடப்பதற்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையினர், அதை சரிசெய்ய வேண்டுமென அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

முக்கியத்துவம் வாய்ந்த விழுப்புரம்- புதுச்சேரி நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இச்சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையிலும், சாலை விபத்துகளை தடுக்கும் விதமாகவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரத்தில் இருந்து கோலியனூர் கூட்டுசாலை வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டதோடு சாலையின் நடுவே தடுப்புச்சுவரும் அமைக்கப்பட்டது.

மேலும் படிக்க: விஜய் படமே இங்கதான் எடுத்திருக்காங்க பாருங்களேன்..! இந்த கோயில்ல இத்தனை படங்கள ஷூட் பண்ணிருக்காங்களா?

இந்நிலையில் விழுப்புரம் அருகே சாலைஅகரம் பெட்ரோல் நிலையம் அருகில் கடந்த ஓராண்டுக்கு முன்பு இரவு நேரத்தில்,லாரி ஒன்று சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதியதில் அந்த தடுப்புச்சுவர் உடைந்து சேதமடைந்ததோடு அதிலுள்ள இரும்புக்கம்பிகள் வெளியே தெரிந்தன.

தடுப்பு சுவரில் இருந்து வெளியே தெரியும் இரும்புக் கம்பிகளை , சரி செய்து தடுப்பு சுவரில் சிமெண்ட் பூசி ஒழுங்குபடுத்த அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர் .

மேலும் படிக்க: பொன்னியின் செல்வன் போற்றும் பழையாறை - சிறப்புகள் என்னென்ன தெரியுமா?

விழுப்புரத்தில் இருந்து கோலியனூர் கூட்டுசாலை வரை எச்சரிக்கை பிரதிபலிப்பான்கள் இல்லாததால் வாகன ஓட்டிகள் குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் அவ்வழியாக செல்லும்போது ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.

மேலும் சாலைஅகரம் பெட்ரோல் நிலையம் அருகில் உள்ள தடுப்புச்சுவர் சேதமடைந்து ஓராண்டாக இரும்புக்கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டபடி உயிர்பலி வாங்க காத்திருப்பதால் ஏதேனும் விபத்து ஏற்பட்டு விபரீதம் நடந்தால்தான் அதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே ஏதேனும் விபரீதம் நடப்பதற்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறையினர் சேதமடைந்த அந்த தடுப்புச்சுவரை சீரமைத்து சரி செய்ய வேண்டும்.

Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram