ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரத்தில் இடிந்து விழுந்த காவல்நிலைய மேற்கூரை - தப்பிய காவலர்கள்

விழுப்புரத்தில் இடிந்து விழுந்த காவல்நிலைய மேற்கூரை - தப்பிய காவலர்கள்

இடிந்து

இடிந்து விழுந்த காவல்நிலைய மேற்கூரை

விழுப்புரத்தில் மழையின் காரணமாக காவல்நிலைய மேற்கூரை திடீரென இடிந்து விழுந்த்தில் காவலர்கள் அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Viluppuram, India

  விழுப்புரத்தில் மழையின் காரணமாக காவல்நிலைய மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் காவலர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.

  விழுப்புரம் நான்குமுனைச் சந்திப்பில் உள்ள மேற்கு காவல் நிலையத்தை ஒட்டி, போக்குவரத்துக் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. மிகவும் பழமையான கட்டிடத்தில் இந்த போக்குவரத்து காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. முறையான பராமரிப்பு இல்லாததால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இந்த காவல் நிலைய கட்டடம் உள்ளது.

  இந்த நிலையில் விழுப்புரத்தில் தொடர்மழை காரணமாக கட்டிடத்தின் ஒரு பகுதி மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அந்த சமயத்தில் அங்கு காவலர்கள் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

  லேசான மழைக்கே தாங்காத சிதலமடைந்த கட்டடத்தில் எஞ்சிய மேற்கூரையும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என போலீஸார் மிகுந்த அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர்.

  மேலும் வழக்குகள் சம்மந்தமாக காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பழமையான இக்கட்டிடத்தை இடித்து, புதியதாக கட்டிடம் கட்டுவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல்துறையின் சார்பாக கோரிக்கை எழுந்துள்ளது.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Local News, Police station, Villupuram