முகப்பு /செய்தி /விழுப்புரம் / கள்ளச்சாராய வேட்டை எதிரொலி - விழுப்புரத்தில் டாஸ்மாக் வருமானம் உயர்ந்தது..!

கள்ளச்சாராய வேட்டை எதிரொலி - விழுப்புரத்தில் டாஸ்மாக் வருமானம் உயர்ந்தது..!

டாஸ்மாக் வருமானம் உயர்வு

டாஸ்மாக் வருமானம் உயர்வு

டாஸ்மாக் கடைகளில் நாள்தோறும் 70 லட்சம் ரூபாய் வரை விற்பனை அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரத்தில் கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்பட்ட பிறகு டாஸ்மாக் கடைகளில் நாள்தோறும் 70 லட்சம் ரூபாய் வரை விற்பனை அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பம் கிராமத்தில் விஷச் சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்தனர். இதேபோன்று திண்டிவனம் அருகே கோவடி கிராமத்தில் விஷச்சாராயம் அருந்தி ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க காவல்துறையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது கள்ளச்சாராய விற்பனை முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையானது 4 கோடியே 30 லட்சம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 222 டாஸ்மாக் கடைகளில் நாளொன்றுக்கு மூன்று கோடியே 70 லட்சம் ரூபாய் வரை வழக்கமாக வர்த்தகம் நடைபெறும் நிலையில், தற்போது 50 லட்சம் முதல் 70 லட்சம் ரூபாய் வரை விற்பனை அதிகரித்து இருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க; Tamil Live Breaking News | ரூ.2,000 நோட்டுகள் மாற்றம் - வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்

இதேபோன்று கடலூர், திருவாரூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் டாஸ்மாக் வருவாய் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

top videos
    First published:

    Tags: Tasmac, Villupuram