முகப்பு /செய்தி /விழுப்புரம் / விஷ சாராயம் விவகாரத்தில் திடீர் திருப்பம்... முக்கிய குற்றவாளி அதிரடி கைது... வெளிவந்த அதிர்ச்சித் தகவல்...!

விஷ சாராயம் விவகாரத்தில் திடீர் திருப்பம்... முக்கிய குற்றவாளி அதிரடி கைது... வெளிவந்த அதிர்ச்சித் தகவல்...!

சென்னையில் ரசாயன ஆலை உரிமையாளர் கைது

சென்னையில் ரசாயன ஆலை உரிமையாளர் கைது

Viluppuram | விழுப்புரம் மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து பலர் உயிரிழந்த நிலையில், முக்கிய குற்றவாளியான ரசாயன ஆலை உரிமையாளர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பத்தில் சனிக்கிழமை இரவு விஷச்சாராயம் குடித்த 50-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில், சுரேஷ், ராஜமூர்த்தி, மலர்விழி, விஜயன், சங்கர், ராஜவேல், ஆபிரகாம் உள்ளிட்ட 12 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இந்நிலையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 38 வயதான ராஜவேல் என்பவர் நேற்று காலை உயிரிழந்தார்.

இதனால், எக்கியார்குப்பத்தில் விஷச்சாராயம் குடித்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. முண்டியம்பாக்கம் மற்றும் மரக்காணம் அரசு மருத்துவமனைகளில் 52 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கெமிக்கல் பேக்டரி உரிமையாளரை காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்தனர்.

சென்னை வானகரம் மேட்டுக்குப்பம் பகுதியில் வினாயகா எண்டர்பிரைசஸ் என்ற கெமிக்கல் ஃபேக்டரி நடத்தி வரும் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த இளையநம்பியை ஏடிஎஸ்பி பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர்.

' isDesktop="true" id="980450" youtubeid="loeI4Eafd4w" category="viluppuram">

top videos

    இந்த வழக்கில் ஏற்கனவே கைதான 8 பேரும், இளையநம்பியிடமிருந்து 600 லிட்டர் மெத்தனால் வாங்கியதாக வாக்குமூலம் அளித்திருந்திருந்தனர். அதன் அடிப்படையில் இளையநம்பியை கைது செய்த காவல்துறையினர் காஞ்சிபுரம் அழைத்துச் சென்றனர்.

    First published:

    Tags: Crime News, Viluppuram S22p13